முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புனே மெட்ரோ ரெயில் சேவை: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2024      இந்தியா
Metro-Rail 2024-03-28

புனே, புனேயின் சிவாஜிநகர் மாவட்ட கோர்ட்டு- ஸ்வர்கேட் இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். 

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வியாழக் கிழமை மும்பை புனே சிவாஜிநகர் மாவட்ட கோர்ட்டு- ஸ்வர்கேட் வரையிலான சுரங்க மெட்ரோ ரெயில் பாதையை திறந்து வைக்கவும், மேலும் ரூ.22 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைக்கவும் திட்டமிட்டு இருந்தார். 

மேலும் பிரதமர் வருகைக்காக புனேயில் உள்ள எஸ்.பி. கல்லூரி மைதானத்தில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் புனேயில் பெய்த கனமழை காரணமாக இந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) கட்சி தலைவர் சுப்ரியா சுலே, இந்த வழித்தடத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்க வேண்டும் என்று பிரதமருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். 

அதுமட்டுமின்றி மகாவிகாஸ் அகாடி கூட்டணி கட்சிகளை சேர்ந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி) மற்றும் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியினர் மெட்ரோ ரெயில் வழித்தடத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சிவாஜிநகர் மாவட்ட கோர்ட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் முரளிதர் மொகோல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

பிரதமர் நரேந்திர மோடி புனே மெட்ரோவின் சிவாஜிநகர் மாவட்ட கோர்ட்டு- ஸ்வர்கேட் பாதையை 29-ம்  தேதி (இன்று) திறந்து வைக்கிறார். மேலும் ஸ்வர்கேட்- கட்ராஜ் நீட்டிப்பு பாதைக்கும் அடிக்கல் நாட்டுகிறார் என  கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து