முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹிட்லர் விமர்சனம்

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2024      சினிமா
Hitler-Review 2024-03-30

Source: provided

சென்னை ரயில் நிலையத்தில் நாயகன் விஜய் ஆண்டனி நாயகி ரியா சுமனை கண்டதும் காதல் கொண்டு அதே ரயிலில் பயணிக்கிறார். அந்த ரயிலில் 400 கோடியை எடுத்துச் செல்லும் ஒரு கும்பலைக் கொலை செய்துவிட்டு அந்த பணத்துடன் இன்னொரு மர்ம கும்பல் தப்பிச் செல்கிறது. அந்த கும்பலை பிடிப்பதற்கான பொறுப்பு காவல்துறை அதிகாரி கெளதம் மேனனுக்கு வழங்கப்பட, அவரது விசாரணையில் அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வருகிறது. அது என்ன?  என்பது தான் ‘ஹிட்லர்’.படக்கதை. 

ஒரு நாயகனாக விஜய் ஆண்டனி தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக கையாண்டு, காதல் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளில் எந்தவித குறையும் இல்லாமல் நடித்திருக்கிறார். நாயகி ரியா சுமன் அழகாக நடித்திருக்கிறார். சரண்ராஜ், தமிழ், ஆடுகளம் நரேன், ரெடின் கிங்ஸ்லி, ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். விவேக் - மெர்வின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அருமையாக இருக்கிறது. மக்கள் பிரச்சனையை கருவாக வைத்துக்கொண்டு கமர்ஷியல் ஆக்‌ஷன் ஜானரில் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் தனா சற்றே தடுமாறி இருக்கிறார். மொத்தத்தில் இவர் ஒரு தமாஷ் ஹிட்லர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து