தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் 77 இடங்களில் இன்று காங்கிரஸ் பாத யாத்திரை

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2024      தமிழகம்
Cong 2024-06-19

Source: provided

சென்னை : தமிழகம் முழுவதும் 77 இடங்களில் இன்று காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை நடத்தப்படுகிறது. 

தமிழகம் முழுவதும் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி பாத யாத்திரை நடத்த காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் வெறுப்பு, அரசியலுக்கு எதிராகவும் நடத்தப்படும் இந்த பாத யாத்திரை சென்னையில் இன்று காலை 7 மணியளவில் அண்ணாசாலை ஜிம்கானா கிளப் அருகில் இருந்து புறப்படுகிறது.

மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெறும் இந்த பாத யாத்திரை மேதின பூங்கா, சிந்தாதிரிப்பேட்டை, ரமடா ஓட்டல் சந்திப்பு, லாங்ஸ் கார்டன், புதுப்பேட்டை, பாந்தியன் ரோடு வழியாக அருங்காட்சியகத்தை அடைகிறது. 

அங்கு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பிரகாரத்தை நிறைவு செய்கிறார்கள். இதே போல் இன்று மாநிலம் முழுவதும் 77 இடங்களில் பாத யாத்திரை நடக்கிறது. திருச்சியில் திருநாவுக்கரசர் தலைமையிலும், ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையிலும் சிதம்பரத்தில் கே.எஸ்.அழகிரி தலைமையிலும் நடக்கிறது.

இதேபோல் ஒவ்வொரு இடத்திலும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைமையிலும் பாத யாத்திரை நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து