முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'முபாசா-தி லயன் கிங்' திரைப்படம்: உலக அளவில் ரூ.3,200 கோடி வசூல் செய்து புதிய சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜனவரி 2025      உலகம்
Mubasa-The-Lion-King 2025-0

Source: provided

நியூயார்க் : முபாசா : தி லயன் கிங் திரைப்படம் உலக அளவில் ரூ.3,200 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை வைத்து  பேரி ஜென்கின்ஸ் இயக்கத்தில் பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் முபாசா : தி லயன் கிங் . இப்படம் கடந்த 20-ந் தேதி வெளியானது. இந்த படத்தில் முபாசா கதாபாத்திரத்திற்கு அர்ஜுன் தாஸ் குரல் கொடுத்திருந்தார். மேலும் அசோக் செல்வன், நாசர், விடிவி கணேஷ், சிங்கம் புலி, ரோபோ ஷங்கர் என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்திருந்தனர். இந்தியில் ஷாருக்கானும், தெலுங்கில் மகேஷ் பாபுவும் குரல் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முபாசா கடந்து வந்த பாதையை வைத்து உருவாகியுள்ளது. அரச குடும்பத்தை சாராது, அனாதையாக வளர்ந்து தனக்கான ஆட்சியை உருவாக்கும் முபாசாவின் கதை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த நிலையில், இப்படம் உலக அளவில் ரூ.3,200 கோடி வசூல் செய்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் 16 நாட்களில் சுமார் ரூ.150 கோடி வசூலித்துள்ளது. தமிழ் நாட்டில் மட்டும் ரூ.23 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து