முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: எலான் மஸ்க் மீண்டும் முதலிடம்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜனவரி 2025      உலகம்
Elon-Musk 2025-01-05

Source: provided

நியூயார்க் : போர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக மகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் புத்தாண்டில் உலக பெரும் கோடீஸ்வரராக அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் திகழ்கிறார். அவரது சொத்து மதிப்பு 421.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அமேஸான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் 233.5 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் இரண்டாமிடத்தில் உள்ளார்.

உலக அளவில் நூறுகோடி டாலருக்கு மேல் சொத்து வைத்துள்ள பெரும் கோடீஸ்வரர்கள் குறித்து போர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளவர்கள்: எலான் மஸ்க் (421.2 பில்லியன் டாலர்), ஜெஃப் பெஸோஸ் (233.5 பில்லியன் டாலர்), லேர்ரி எல்லிசன் (209.7 பில்லியன் டாலர்),  மார்க் ஸூக்கர்பெர்க் (202.5 பில்லியன் டாலர்), பெர்னார்டு அர்னால்ட் (168.8 பில்லியன் டாலர்), 

லேர்ரி பேஜ் (156 பில்லியன் டாலர்), செர்கே பிரின் (149 பில்லியன் டாலர்), வாரன் பஃப்பெட் (141.7 பில்லியன் டாலர்), ஸ்டீவ் பால்மெர் (124.3 பில்லியன் டாலர்), ஜென்சென் ஹாங்க் (117.2 பில்லியன் டாலர்), 99.9 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் அலைஸ் வால்டன் உலகின் கோடீஸ்வர பெண் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். இவர் வால்மார்ட் நிறுவனர் சாம் வால்டனின் மகளாவார். உலக மகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் 17-ஆவது இடம் பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து