முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டத்தில் சிக்கி ரசிகை உயிரிழந்த விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜூனுக்கு ஜாமீன்

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2025      சினிமா
Allu-Arjun 2024-09-04

Source: provided

ஐதராபாத் : புஷ்பா 2 படம் பார்க்க  ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி  பலியான விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்திலுள்ள திரையரங்கில் டிச. 4 ஆம் தேதி புஷ்பா 2 படம் பார்க்க அல்லு அர்ஜூன் வந்திருந்தபோது, அவரைக் காணச் சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவரின் 8 வயது மகன் படுகாயம் அடைந்தார். இச்சம்பவத்தில் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஒருநாள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அல்லு அர்ஜூன் தரப்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் அசோக் ரெட்டி, அல்லு அர்ஜூன் வேண்டுமென்றே யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. இதற்கு முன்னதாக, ஹிந்தி திரைப்படமான ரயீஸ் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியிலும் ஒருவர் உயிரிழந்ததாக சுட்டிக்காட்டினார். நீதிமன்றத்தில் வாதங்கள் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் நீடித்தன. இந்தச் சம்பவத்தில் நடிகர் மீது மட்டும் குற்றம் சாட்ட முடியாது என்று அசோக் ரெட்டி எடுத்துரைத்தார்.

இதையடுத்து நடிகர் அல்லு அர்ஜூனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இது குறித்து அவரின் வழக்குரைஞர் அசோக் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ அல்லு அர்ஜூனுக்கு ரூ.50,000 பிணைத் தொகையாக அளிக்க வேண்டும் என்று நீதிபதி கூறியதாகதெரிவித்தார். மேலும் வாரம் ஒருநாள் காவல் நிலையத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் கையெழுத்திடுமாறும் நீதிபதி அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து