முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரியங்கா குறித்து சர்ச்சை கருத்து: பா.ஜ.க. வேட்பாளருக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜனவரி 2025      இந்தியா
Congress 2023 01 25

Source: provided

புதுடெல்லி : பிரியங்கா காந்தியை பற்றி பா.ஜ.க.வின் பிதூரி சர்ச்சையாக பேசியதற்கு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரியா ஸ்ரீநாத் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் நடப்பு ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடும் 29 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டு உள்ளது. இதில், புதுடெல்லி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக முன்னாள் எம்.பி. பர்வேஷ் வர்மாவை அக்கட்சி நிறுத்தி உள்ளது.

இதேபோன்று கல்காஜி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் மற்றும் முதல்வர் அதிஷிக்கு எதிராக முன்னாள் எம்.பி. ரமேஷ் பிதூரியை பா.ஜ.க. நிறுத்தி உள்ளது. இந்நிலையில், பிதூரி அரசியல் பொது கூட்டமொன்றில் பேசும்போது, பீகாரில் லாலு பிரசாத், ஹேமா மாலினியின் மென்மையான கன்னங்களை போன்று சாலைகளை அமைப்பேன் என கூறினார். அவர் பொய் கூறியுள்ளார். அதனை அவரால் செய்ய முடியவில்லை. ஆனால், நான் உங்களுக்கு உறுதி கூறுகிறேன். ஓக்ளா மற்றும் சங்கம் விகார் பகுதியில் நாங்கள் சாலைகளை மேம்படுத்தியது போன்று, கல்காஜியில் உள்ள அனைத்து சாலைகளையும் பிரியங்கா காந்தியின் மென்மையான கன்னங்களை போன்று அமைப்போம் என நாங்கள் உறுதியாக கூறுகிறோம் என்று  பேசினார்.

அவருடைய இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் உறுப்பினரான சுப்ரியா ஸ்ரீநாத் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, இது வெட்கக்கேடானது என கூறியதுடன், பெண்களுக்கு எதிரான மனப்பான்மையை பா.ஜ.க. ஊக்குவிக்கிறது என்று கூறியுள்ளார். பிரியங்கா காந்தியை பற்றி அவர் கூறியது, பெண்களை பற்றிய அவருடைய மனநிலையை காட்டுகிறது. இதுவே பா.ஜ.க.வின் உண்மையான முகம் என்றும் கடுமையாக சாடியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து