முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை சாக்ஷி அகர்வால் திருமணம்

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2025      சினிமா
Sakchi 2025-01-03

Source: provided

கோவா : நடிகை சாக்ஷி அகர்வாலின் திருமணம் கோவாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று  நடைபெற்றது. 

 மாடல் அழகியாக பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்து அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் சாக்ஷி அகர்வால். மாடல் அழகியாக பல்வேறு விளம்பர திரைப்படங்களிலும் போட்டோ சூட் நடத்தியும் பிரபலமான கவர்ச்சி மாடல் அழகியாக தென்பட்டு வந்தார் . முதன் முதலில் கன்னட படங்களில் பணியாற்றிய சாக்ஷி அதன் பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. இதனிடையே கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

ஒரு சில திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க தொடங்கியதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்தார். இதனிடையே அட்லீ இயக்கத்தில் 2013 -ம் ஆண்டு வெளியான "ராஜா ராணி" திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் சாக்ஷி அகர்வால் நடித்திருந்தார். அவருடைய நடிப்பில் "கெஸ்ட்" மற்றும் "தி நைட்" என்கின்ற இரு திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் விஸ்வாசம் , சிண்ட்ரல்லா , அரண்மனை 3, காலா உள்ளிட்ட திரைப்படங்களிலிலும் இவர் நடித்துள்ளார்.இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

நடிகை சாக்ஷி அகர்வாலின் திருமணம் நேற்று  கோவாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. நண்பராக இருந்து வந்த நவனீத் மிஸ்ரா என்பவரை சாக்ஷி காதலித்து கரம்பிடித்துள்ளார். திருமண புகைப்படங்களை நடிகை சாக்ஷி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து