முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் : தி.மு.க. அரசுக்கு சி.பி.எம். கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜனவரி 2025      தமிழகம்
CPM 2025-01-05

Source: provided

சென்னை : அரசு ஊழியர், சத்துணவு ஊழியர், அங்கன்வாடி ஊழியர், பள்ளி-கல்லூரிகளின் ஆசிரியர்கள் ஆகியோரின் கோரிக்கைகள் மீதான தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-யின் 24-வது தமிழ்நாடு மாநில மாநாடு ஜனவரி 3, 5 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் ஆனந்தா திருமண மண்டபத்தில் மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம் தலைமையில் நடந்தது. இம்மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் பிருந்தா காரத், எம்.ஏ. பேபி, ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் மத்தியக்குழு, மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் தமிழகம் முழுவதிலிமிருந்து 550க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

நேற்றைய பிரதிநிதிகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம்: அரசு ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் ஆசிரியர்களின் நலன்கள், கோரிக்கைகள் கடந்த கால அதி.மு.க. ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட சூழலில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் நிகழும் போது அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் தரப்பட்டது.

மிக முக்கியமானதாக வரையறுக்கப்பட்ட பயன் கொண்ட பழைய பென்ஷன் திட்டம் மீட்கப்படும் என்ற அறிவிப்பு அமைந்தது. 01.04.2003 முதல் அரசுப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டு எவ்வித வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய பயனுக்கும் உத்தரவாதம் இல்லாத நிலைமைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர். ஐந்து மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு திரும்புவதாக அறிவித்து அமலாக்கத்தை துவங்கியுள்ளன.

தமிழ்நாட்டின் சத்துணவு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. 2021 தேர்தல் வாக்குறுதியில் தொகுப்பூதியம் ஒழிக்கப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 40 ஆண்டு காலமாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வரும் சத்துணவு ஊழியர்களின் இக்கோரிக்கை கூட ஈடேறாத நிலையில் காலைச் சிற்றுண்டியை தனியார் முகமைக்கு வழங்கப்பட்ட முடிவு எதிர் மாறானதாகும்.

கல்வித்துறையை பொருத்தவரையில் தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ பல்வேறு பெயர்களில் மறைமுகமாக செயல்படுத்துவதை தமிழக அரசு கைவிட வேண்டும். தமிழக அரசால் தமிழகத்திற்கான கல்வி கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி குழுவின் பரிந்துரை இன்னும் அமலாக்கப்படவில்லை. அதன் அமலாக்கத்தை உறுதி செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு 2021 இல் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடமை உள்ளது. கடந்த மூன்றரை ஆண்டு காலமாக எதிர்பார்த்து காத்திருக்கும் அரசு ஊழியர் ஆசிரியர்களின் சத்துணவு ஊழியர்களின் சங்கங்களை அழைத்துப் பேசி நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என விழுப்புரத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில 24வது மாநாடு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து