முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கை கொடுத்தது ஏ.ஐ. தொழில்நுட்பம்: 60 யானைகளின் உயிரை காப்பாற்றிய ரயில் டிரைவர்

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2024      இந்தியா
Assam 2024-10-19

Source: provided

திஸ்புர் : அசாம் மாநிலத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தொழில்நுட்பம் உதவியால், தண்டவாளத்தை கடந்த 60 யானைகளின் உயிரை ரயில் டிரைவர் காப்பாற்றி உள்ளார்.

நாட்டின் பல மாநிலங்களில் யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இது போன்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு மத்திய அரசு தொழில்நுட்பம் உதவியுடன் சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

அதன்படி, செயற்கை நுண்ணறிவு என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மேற்கு வங்கம், அசாம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும், தமிழகத்தில் கோவையிலும் கஜ்ராஜ் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது. 

 அதன்படி அசாமில் தண்டவாளத்தை கடந்த 60 யானைகளின் உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:

கவுகாத்தியில் இருந்து லும்டிங் பகுதிக்கு காம்ரூப் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. ஹபாய்பூர், லம்சக்ஹாங் ரயில் நிலையங்கள் இடையே இந்த ரயில் வந்தபோது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் யானைகள் தண்டவாளத்தை கடக்கும் எச்சரிக்கை அறிவிப்பு இயங்கியது.

உடனடியாக சுதாரித்த ரயில் டிரைவர் தாஸ், உதவி ரயில் டிரைவர் உமேஷ் குமார் இருவரும் எமர்ஜென்சி பிரேக்குகளை பயன்படுத்தி ரயிலை நிறுத்தி உள்ளனர். அப்போது 60-க்கும் மேற்பட்ட யானைகள், தங்கள் குட்டிகளுடன் தண்டவாளத்தை கடந்து மறுபுறம் சென்றன.

ரயிலில் இருந்து இறங்கிய டிரைவர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் யானைகள் கூட்டம் தண்டவாளத்தை கடந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டதா என்பதை நேரிடையாக சென்று உறுதிப்படுத்தினர். அதன் பின்னர் ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு  வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் 60-க்கும் மேற்பட்ட யானைகளின் உயிர் காப்பாற்றப்பட்டு உள்ளது. சரியான நேரத்தில் சுதாரித்து  யானைகளின்  உயிரை காப்பாற்றிய  ரயில் டிரைவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து