முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழகம்-டெல்லி ஆட்டம் டிரா

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2024      விளையாட்டு
Tamil-Nadu-Delhi 2024-10-21

Source: provided

புதுடெல்லி : ரஞ்சி கோப்பை தொடரில் பாலோ ஆன நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய டெல்லி அணி கடைசி நாள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் அடித்ததால் தமிழகம் - டெல்லி இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.  

674 ரன்கள் குவிப்பு... 

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில், தமிழ்நாடு - டெல்லி இடையிலான ஆட்டம் (டி பிரிவு) டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 674 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. சாய் சுதர்சன் இரட்டை சதம் நொறுக்கினார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய டெல்லி அணி 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்திருந்தது.

264 ரன்கள் சேர்ப்பு...

3-வது நாளில் தொடர்ந்து ஆடிய டெல்லி அணியில் யாஷ் துல் நிலைத்து நின்று ஆட, இன்னொரு பக்கம் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. அந்த அணி 2-வது நாள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்கள் அடித்திருந்தது. யாஷ் துல் 103 ரன்களுடன் களத்தில் இருந்தார். தமிழகம் தரப்பில் குர்ஜப்னீத் சிங், முகமது, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பாலோ ஆன் ஆனது...

இதனையடுத்து கடைசி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த டெல்லி அணி முதல் இன்னிங்சில் மேற்கொண்டு 2 ரன்கள் அடித்த நிலையில் 266 ரன்களில் ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது. அதன்படி 2-வது இன்னிங்சை தொடங்கிய டெல்லி அணி கடைசி நாள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் அடித்தது. இதனால் இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து