முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் இது 5-வது சம்பவம்: பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்: போலி மிரட்டல்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2024      இந்தியா
Boom

புதுடெல்லி, டெல்லியில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு நேற்று இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இது கடந்த 9 நாட்களில் 5-வது சம்பவம் ஆகும்.போலி மிரட்டல்களை விடுப்பவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நேற்று முன்தினம் சுமார் 20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை மீண்டும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.

இது இந்த வாரத்தின் 2-வது வெடிகுண்டு மிரட்டல் சம்பவமாகும். இதன்படி, டெல்லியில் கடந்த 9 நாட்களில் 5 முறை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளன. இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் மின்னஞ்சல் மூலம் விடுக்கப்படுகின்றன. மேலும் இவை அனைத்தும் போலியான மிரட்டல்கள் என்பது போலீசாரின் தோனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளன.

டெல்லியில் ஏற்கனவே காற்று மாசு காரணமாக பல்வேறு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் சென்று தீவிர சோதனை மேற்கொண்டு, சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து இந்த போலி மிரட்டல்களை விடுப்பவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து