முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மண்டல பூஜையை முன்னட்டு சபரிமலைக்கு புறப்பட்ட தங்க அங்கி ஊர்வலம்

ஞாயிற்றுக்கிழமை, 22 டிசம்பர் 2024      இந்தியா
sabarimala 2024-12-22

Source: provided

சபரிமலை: தங்க ஆபரணங்கள் பத்தனம் திட்டா ஆரன்முலாவில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் வைக்கப்பட்டிருக்கும். விழா முடிந்ததும் அங்கிருந்து ஆரன்முலா கொண்டு வரப்பட்டு கோவிலில் வைக்கப்படும்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜையின் போது அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். திருவிதாங்கூர் மன்னர் வழங்கிய இந்த தங்க ஆபரணங்கள் பத்தனம் திட்டா ஆரன்முலாவில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் வைக்கப்பட்டிருக்கும்.

மண்டல பூஜைக்காக இங்கிருந்து தங்க அங்கி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சபரிமலை அய்யப்பனுக்கு அணி விக்கப்படும். பின்னர் விழா முடிந்ததும் அங்கிருந்து ஆரன்முலா கொண்டு வரப்பட்டு கோவிலில் வைக்கப்படும். 

இந்த ஆண்டு மண்டல பூஜை வருகிற 26-ந் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட வேண்டிய தங்க அங்கி மற்றும் நகைகள் நேற்று காலை ஆரன்முலா பார்த்தசாரதி கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்டது.

சபரிமலை கோவிலை போன்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தேருக்கு தங்க ஆபரணங்கள் வந்ததும் ஊர்வலமாக தேர் புறப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் தங்க அங்கியை வழிபட்டனர்.

இந்த ஊர்வலம் வரும் 3 நாட்களில் ஓமநல்லூர் ஸ்ரீரக்த கண்டசுவாமி கோவில், கொன்னி முரிங்கமங்கலம் ஸ்ரீ மகா தேவர் கோவில், ரன்னி-பெருநாடு ஸ்ரீதர்மசாஸ்தா கோவில்களில் நிறுத்தப் பட்டு வழிபாடு நடத்தப்படும்.

25-ந் தேதி நிலக்கல் ஸ்ரீசிவன் கோவில் மற்றும் பம்பை கணபதி கோவில்களில் தங்க அங்கி ஊர்வலத்திற்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படும். அன்று மாலை 6 மணிக்கு சன்னிதானம் சென்றடையும் தங்க அங்கி அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். மறுநாள் 26-ம் தேதி மண்டல பூஜை வழிபாடு நடைபெறும். மறுநாள் நடை சாத்தப்படுகிறது. மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக 30-ந் தேதி நடை திறக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து