முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பனாமா கால்வாய் வழியாக செல்லும் அமெரிக்க கப்பல்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதை நிறுத்த வேண்டும் டெனால்டு டிரம்ப் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 22 டிசம்பர் 2024      உலகம்
trump 2024--12-22

Source: provided

வாஷிங்டன்: பனாமா கால்வாய் வழியாகச் செல்லும் அமெரிக்க கப்பல்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. இதனை நிறுத்தாவிட்டால், அதனை அமெரிக்காவே எடுத்துக் கொள்ளும்,'என அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப் கூறியுள்ளார்.

அட்லாண்டிக் கடலையும், பசுபிக் கடலையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது பனாமா கால்வாய். இதனை அமெரிக்கா கடந்த 1914 ல் வடிவமைத்தது. பிறகு, 1999 டிசம்பர் 31‑ம் அன்று பனாமா நாட்டிடம் ஒப்படைத்தது. இந்நிலையில், வருகிற ஜனவரி மாதத்திற்குள் அமெரிக்கா அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:‑

அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு முக்கிய பங்கு வகிக்கும் பனாமா கால்வாய், எங்கள் நாட்டின் தேசியச் சொத்து. அமெரிக்காவின் வர்த்தகம், கடற்படை விரிவாக செல்லுவதற்கும், அமெரிக்க துறைமுகங்களுக்கு பொருட்களை விரைவாக கொண்டு செல்வதற்கும் இக்கால்வாயின் பங்கு மிகவும் முக்கியமானது. இக்கால்வாயை அதிகம் பயன்படுத்தும் நாடு அமெரிக்கா.

நவீன உலகின் அதிசயங்களில் ஒன்றான இக்கால்வாயை 110 ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைக்கப்பட்டது. இதற்காக அமெரிக்கர்களின் அதிகளவு பணம் செலவு செய்யப்பட்டது. கட்டுமானத்தின் போது, வனப்பகுதியில் பலவித பிரச்னைகள் காரணமாக 38 ஆயிரம் அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர்.

இது மற்றவர்களின் பலன்களுக்காக வழங்கப்படவில்லை. மாறாக அமெரிக்கா - பனாமா இடையே ஒத்துழைப்புக்கான அடையாளமாக வழங்கப்பட்டது. அமெரிக்க கப்பல்கள், கடற்படைக்கு பனாமா வசூலிக்கும் வரி அதிகமானது. இதற்கான விதிமுறைகள் பின்பற்றப்படாவிட்டால் அக்கால்வாயை திரும்ப கேட்போம். எவ்வித கேள்வியும் இன்றி எங்களிடம் திருப்பித் தரப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் டிரம்ப் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து