முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரில் சோகம்: கார் மீது லாரி கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 22 டிசம்பர் 2024      இந்தியா
Acctnet

Source: provided

கர்நாடகா: பெங்களூரில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் சி.இ.ஓ. உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு அருகே நெலமங்களாவில் கார் மீது கண்டெய்னர் லாரி கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த கோர விபத்தில், காரில் பயணம் செய்த 5 பேரும், பைக்கில் சென்ற ஒருவர் என மொத்தம் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காரில் உயிரிழந்த 5 பேரும் டெக் சி.இ.ஓ.வான சந்திரம் யெகாபகோல்(46 வயது) மற்றும் அவரது குடும்பதினர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. சந்திரம் யெகாபகோல் தனியார் சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். இவர் பெங்களூரில்  தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் உள்ள மோர்பாகி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரம். கடந்த 2018‑ம் ஆண்டு பெங்களூரில் ஐ.ஏ.எஸ்.டி.நிறுவனத்தை தொடங்கினார்.

விபத்து சம்பவம் நடந்தபோது பல டன் எடையுள்ள அலுமினிய தூண்களை ஏற்றிச் சென்ற ஐஷர் லாரி பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது.முன்னால் சென்ற மற்றொரு வாகனத்தின் மீது மோதாமல் இருக்க லாரி ஓட்டுநர் முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்ற லாரி, பாதையை விட்டு விலகி, மீடியனைக் கடந்து சந்திரம் குடும்பத்தினர் பயணித்த காரின் மீது மோதியுள்ளது. காரி லாரிக்கு அடியில் சிக்கி நசுங்கியது.தனது பூர்வீக கிராமத்தில் உடல்நலக்குறைவுடன் இருந்த தந்தையை பார்க்க சந்திரம் குடும்பத்துடன் சென்றுகொண்டிருந்தபோது இந்த சோக விபத்தானது ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து