முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமரை எதிர்க்கும் துணிவு எடப்பாடிக்கு இருக்கிறதா? மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி

ஞாயிற்றுக்கிழமை, 22 டிசம்பர் 2024      தமிழகம்
Stalin-a 2024-11-25

Source: provided

சென்னை: பிரதமரை எதிர்க்கும் துணிவு எடப்பாடி பழனிசாமிக்கு  இருக்கிறதா? எனறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக பா.ஜ.க.வை கண்டித்தாரா எடப்பாடி பழனிசாமி? புரட்சியாளர் அம்பேத்கரை கொச்சைப்படுத்தி பேசிய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு எதிராக கீச்சுக்குரலிலாவது கத்தினாரா? .

பிரதமர் மோடியை எதிர்த்துப் பேசுகிற துணிவு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறதா? 2019‑ல் 20 தொகுதிகளில் போட்டியிட்டு 19.4 சதவீதம், 2024‑ல் 34 தொகுதிகளில் போட்டியிட்டு 20.4 சதவீதம் வாக்குகளும் அ.தி.மு.க. பெற்றுள்ளது . 2019‑ஐ விட, 2024 நாடாளுமன்ற தேர்தலில் 12.58 விழுக்காடு வாக்குகள் குறைவாக பெற்றுள்ளது.

அ.தி.மு.க. தொண்டர்களுக்கு சாதாரண கூட்டல் வகுத்தல் கணக்கே தெரியாது என்று நம்பி பொய்க்கணக்கை அவிழ்த்துவிட்டுள்ளார்  எடப்பாடி பழனிசாமி சொன்ன கணக்கை அடிப்படை அறிவுள்ள அ.தி.மு.க.வினரே நம்ப மாட்டார்கள். என தெரிவித்தார் . 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து