முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

13 வயது வீரர்: சாம்சன் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 22 டிசம்பர் 2024      விளையாட்டு
Sanju-Samson

Source: provided

அணியில் இடம்பெற்றுள்ள 13 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "நான் வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங் செய்யும் வீடியோக்களை பார்த்துள்ளேன். அதே போன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தேர்வாளர்கள் சென்னையில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா 19 வயதுக்குட்பட்டோர் போட்டியை நேரில் பார்த்தனர். அந்த போட்டியில் விளையாடிய சூர்யவன்ஷி சதம் அடித்திருந்தார். அவர் அடித்த சதத்தை விட அவர் விளையாடிய ஷாட்கள்தான் அவரை சிறந்த வீரராக எங்களது அணியின் நிர்வாகிகளுக்கு காட்டி இருக்கிறது. 

அதன் காரணமாகவே அவர்கள் வைபவ் சூர்யவன்ஷியை வாங்கியுள்ளனர். ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜுரேல் போன்ற வீரர்களை மிக இளம் வயதிலேயே அணிக்குள் கொண்டு வந்து அவர்களை தற்போது இந்திய அணியில் விளையாடும் அளவிற்கு முன்னேற்றியுள்ளது. அந்த வரிசையில் தற்போது வைபவ் சூர்யவன்ஷியை மிக இளம் வயதிலேயே கண்டெடுத்துள்ளது. ஐபிஎல் தொடரை வெல்வது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு இந்திய அணிக்கு தரமான வீரர்களை அனுப்பவும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி செயல்களை மேற்கொண்டு வருகிறது" என்று கூறினார்.

மைக்கேல் வாகன் நம்பிக்கை

ஆஸ்திரேலிய வீரர் நாதன் மெக்ஸ்வீனி மீண்டும் அந்த அணியில் இடம்பிடிப்பார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: நாதன் மெக்ஸ்வீனியைப் போன்று யாருக்கும் கிரிக்கெட் பயணம் கடினமாக தொடங்கியிருக்காது என நினைக்கிறேன். அந்த அளவுக்கு மெக்ஸ்வீனியின் கிரிக்கெட் பயணம் கடினமாக தொடங்கியுள்ளது. அவருக்காக நான் வருத்தப் படுகிறேன். ஏனெனில், கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் யாருக்கும் கொடுக்கப்படாத மிகப் பெரிய சவால் அவருக்கு வழங்கப்பட்டது. 

பும்ரா போன்ற பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பேட் செய்தது, பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியது போன்ற சவாலான விஷயங்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மெல்போர்னில் நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் மெக்ஸ்வீனி அணியில் இடம்பெறுவார் என நினைத்தேன். அந்தப் போட்டியில் அவர் சரியாக விளையாடாத பட்சத்தில், அணியில் இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எண்ணினேன். மெக்ஸ்வீனி அணியிலிருந்து நீக்கப்பட்டத்தை அவருக்கு பின்னடைவாக நான் பார்க்கவில்லை. ஆஸ்திரேலிய அணியின் இந்த முடிவு மெக்ஸ்வீனிக்கு எதிர்காலத்தில் நன்மையானதாகவே அமையும். அவர் எதிர்காலத்தில் 4-வது அல்லது 5-வது வீரராக களமிறங்கி சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன் என்றார்.

வலைப்பயிற்சியில் வீரர்கள் காயம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நான்காவது போட்டியான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வருகிற டிசம்பர் 26-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். வலைப்பயிற்சியின்போது, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

பேட்டிங் பயிற்சியின்போது, ரோஹித் சர்மாவுக்கு முழங்காலில் அடிபட்டது. அதேபோல, பந்துவீச்சின்போது ஆகாஷ் தீப்புக்கு காயம் ஏற்பட்டது. இருப்பினும், அவர்கள் இருவருக்குமான காயம் பயப்படும் படியான அளவுக்கு இல்லை எனக் கூறப்படுகிறது. அதனால், பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் அவர்கள் விளையாடுவதில் எந்தவொரு சிக்கலும் இல்லை என்றாலும் ரோகித் பங்கேற்பாரா என்பது சந்தேகமே.

மனம் திறந்த ஆகாஷ் தீப்

பிரிஸ்பேனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி குறித்து இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் மனம் திறந்துள்ளார்.  மூன்றாவது போட்டி டிராவில் முடிய ஆகாஷ் தீப் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இடையேயான பார்ட்னர்ஷிப் மிகவும் உதவியாக இருந்தது. பிரிஸ்பேனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஃபாலா ஆனை தவிர்ப்பதற்காக விளையாடவில்லை எனவும், அணிக்கு தனது பங்களிப்பை வழங்க நினைத்து விளையாடினேன் எனவும் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நானும் ஜஸ்பிரித் பும்ராவும் பின்வரிசை ஆட்டக்காரர்களாக களமிறங்குபவர்கள். அதனால், 25 அல்லது 30 ரன்கள் நாங்கள் குவித்தால், அது அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும். எனது மனதில் அணிக்காக என்னுடைய பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதே இருந்தது. அந்த நாளில் ஃபாலோ ஆனை தவிர்ப்பதற்காக நான் விளையாடவில்லை. ஆட்டமிழக்காமல் அணிக்கு எனது பங்களிப்பை வழங்க நினைத்தேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து