முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை சாலை விபத்தில் சிறுவன் பலி - இளைஞர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 22 டிசம்பர் 2024      இந்தியா
Accdent 2024-12-22

Source: provided

மகாராஷ்டிரா, டிச. 23‑: சாலை விபத்தில், 4 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தான்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வடலா பகுதியில் உள்ள அம்பேத்கர் கல்லூரிக்கு அருகில் 19 வயது இளைஞர் ஓருவர் காரை வேகமாக ஓட்டிச் சென்று பயங்கர விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த விபத்தில், 4 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்த சிறுவன் ஆயுஷ் லக்ஷ்மன் கின்வாடேவின் என்பது தெரியவந்து. இவரது குடும்பம் நடைபாதையில் வசிப்பதாகவும், அவரது தந்தை ஒரு தொழிலாளி என்றும் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காரை ஓட்டி வந்த சந்தீப் கோல் என்கிற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பையில் விபத்துகள் நடப்பது தொடர் கதையாகி உள்ளது. சமீபத்தில், மும்பை மின்சாரம் மற்றும் போக்குவரத்து நிறுவனத்தால் இயக்கப்படும் மின்சாரப் பேருந்தின் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 42 பேர் காயமடைந்தனர்.

இதேபோல், கடந்த டிசம்பர் 9‑ம் தேதி குர்லாவில் நடந்த விபத்தில் 20‑க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இந்த காட்சி அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் அதிக சாலை விபத்துகளை சந்தித்த மாநிலங்களில் மகாராஷ்டிராவும் இருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கடந்த வாரம் தெரிவித்தது.பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், 2018-2022 காலகட்டத்தில் இந்தியா முழுவதும் சாலை விபத்துக்களில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து