முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐதராபாத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டை முற்றுகை

ஞாயிற்றுக்கிழமை, 22 டிசம்பர் 2024      இந்தியா
Alluarjun 2024-12-22

Source: provided

ஐதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன் வீடு முற்றுகையிடப்பட்டு கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

ஐதராபாத்திலுள்ள ஒரு திரையரங்கில் கடந்த 4-ம் தேதி புஷ்பா 2 படம் பார்க்கச் சென்றபோது, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் மரணத்துக்கு நீதி கேட்டு அவர்கள் முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். திரைப்படங்கள் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறீர்கள். ஆனால் அவற்றைக் காண வருவோர் சாக வேண்டுமா? என்ற வாசகத்துடன் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைக் காண முடிந்தது.

இதனிடையே, அல்லு அர்ஜுன் மீதான எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக அவரது வீட்டின் கதவைத் தாண்டிக் குதித்து உள்ளே சென்ற சிலர், அங்கு வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளை உடைத்தும் வீட்டின் மீது கல் வீசி எறிந்தும் தாக்குதல்களை நடத்தியதால் சலசலப்பு உண்டானது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்தனர்

கடந்த 4-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டுகளிக்கச் சென்ற 35 வயதான பெண்மணி ஒருவர், அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த திரையரங்குக்கு அல்லு அர்ஜுன் திடீரென வருகை தந்ததாகவும் அப்போது அவரை காணும் ஆவலில் ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டதால், அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் அவதிக்குள்ளாகினர். அதில் அந்த பெண் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில், திரையரங்க நிர்வாகம், அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாவலர்கள் மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. இந்த வழக்கில் திரையரங்க உரிமையாளர், மேலாளர் உள்பட 3 கைது செய்யப்பட்டனர். அதனைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் அல்லு அர்ஜுனும் கைது செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் ஜாமீனில் விடுவிகப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது, கற்களை வீசி உஸ்மானியா பல்கலைகழக மாணவ அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தடுப்புச்சுவரை தாண்டி உள்ளே சென்ற அவர்கள், அங்கிருந்து பூந்தொட்டிகளை உடைத்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி பலியான ரேவதிக்கு நீதி கேட்டும், ரூ.1 கோடி இழப்பீடு வழங்கக்கோரியும் கோஷம் எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து