முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 22 டிசம்பர் 2024      விளையாட்டு
22-Ram-53

Source: provided

வதோதரா: வெஸ்ட் இண்டீஸ் அணி எதிரான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்  இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

சுற்றுப்பயணம்... 

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது.

வதோதராவில்... 

முதல் டி20 போட்டி வதோதராவில் நேற்று நடைபெற்றது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடியது. இதனால் 50 ஓவர்கள் முடிவில் 9விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 314 ரன்கள் எடுத்தது . இந்திய அணியில் சிறப்பாக விளையாடி ஸ்மிருதி மந்தனா 91 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜைதா ஜேம்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் . தொடர்நது 315 ரன்கள் இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது.

103 ரன்களுக்கு... 

இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 26.2 ஓவர்களில் 103 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது. இதனால் 211 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் ரேணுகா சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் .

மந்தனா புதிய சாதனை 

இந்த போட்டியில் 91 ரன்கள் அடித்ததன் மூலம் சர்வதேச போட்டியில் ஓராண்டில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனைகளின் பட்டியலில் 1, 602 ரன்களுடன் ஸ்மிருதி மந்தனா முதலிடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து