முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை இறுதி: வங்காளதேசத்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்

ஞாயிற்றுக்கிழமை, 22 டிசம்பர் 2024      விளையாட்டு
22-Ram-54

Source: provided

கோலாலம்பூர்: ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்தியா தரப்பில் ஆயுஷி சுக்லா 3 விக்கெட், பருனிகா சிசோடியா, சோனம் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

கோலாலம்பூரில்.... 

முதலாவது மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. இந்த தொடரின் லீக் சுற்று மற்றும் அரையிறுதி ஆட்டங்களின் முடிவில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

இறுதிப்போட்டி... 

இந்நிலையில், இந்தியா-வங்காளதேசம் இடையிலான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 117 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக திரிஷா 52 ரன் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் பர்ஜானா ஈஸ்மின் 4 விக்கெட் வீழ்த்தினார்.

118 ரன்கள் இலக்கு...

தொடர்ந்து 118 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேசம் இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 76 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. வங்காளதேசம் தரப்பில் ஜூயைரியா பெர்டொஸ் 22 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் ஆயுஷி சுக்லா 3 விக்கெட், பருனிகா சிசோடியா, சோனம் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் முதலாவது ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து