முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உட்கட்சி விவகாரங்களை விவாதிக்க வேண்டியதில்லை : ராமதாசுடன் சந்திப்புக்கு பின் அன்புமணி பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2024      தமிழகம்
Anbumani 2024-12-29

Source: provided

சென்னை : கட்சியின் உட்கட்சி விவகாரங்களை பொதுவெளியில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. உட்கட்சி பிரச்சினையை நாங்களே பேசித் தீர்ப்போம். பா.ம.க. ஒரு ஜனநாயக கட்சி. அத்தகைய கட்சியின் பொதுக்குழுவில் காரசார விவாதங்கள் நடைபெறுவது சகஜம்” என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரித்தார்.

புதுச்சேரி அருகேயுள்ள பட்டானூரில் நேற்று முன்தினம் (டிச.28) பா.ம.க. புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில், இளைஞரணி தலைவராக ராமதாஸின் பேரன் நியமிக்கப்பட்டதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர்களிடையே மேடையிலேயே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ‘கட்சியில் இருக்க இஷ்டம் இல்லாதவர்கள் கிளம்பலாம்; இது நான் தொடங்கிய கட்சி’ என ராமதாஸ் ஆவேசமாக தெரிவித்தார். தொடர்ந்து, தனிக் கட்சி அலுவலகம் தொடங்குவதாக அன்புமணி அறிவித்தார். இது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளானது.

இந்நிலையில், விழுப்புரத்தில் தைலாபுரம் தோட்ட இல்லத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸை அவரது மகனும் பா.ம.க. தலைவருமான அன்புமணி ராமதாஸ் நேற்று (டிச.29) நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது. சந்திப்பின் போது ஜிகே மணி உள்ளிட்ட பா.ம.க.வின் முக்கிய நிர்வாகிகள் இருந்தனர்.

ராமதாஸுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், “2026 சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவாதித்தோம். சித்திரை முழுநிலவு மாநாட்டைப் பற்றி, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான போராட்டங்கள், 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு, விவசாய மாநாட்டுக்குப் பின்னர் அடுத்தடுத்து பா.ம.க. முன்னெடுக்க வேண்டிய போராட்டங்கள் என்னென்ன என்பன குறித்து ஆலோசனை செய்தோம்.

வருகின்ற ஆண்டு எங்களுக்கு மிக முக்கியமான ஆண்டு. தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம். அதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து ஐயாவுடன் ஆலோசித்தோம். பா.ம.க. ஒரு ஜனநாயகக் கட்சி. அத்தகைய கட்சியின் பொதுக்குழுவின் காரசார விவாதங்கள் நடைபெறுவது சகஜமே. கட்சியின் உட்கட்சி விவகாரங்களை பொதுவெளியில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தப் பிரச்சினையைப் பற்றி நாங்கள் பேசிக் கொள்வோம். ஐயா எங்களுக்கு என்றும் ஐயா தான்” என்றார். முகுந்தன் பரசுராமன் நியமனம் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது அதற்கு நேரடியாக பதிலளிக்காமல் அன்புமணி கடந்து சென்றது மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து