முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2024      இந்தியா
Police 2023-11-05

Source: provided

புதுச்சேரி : புத்தாண்டையொட்டி புதுச்சேரி கடலில் இறங்குவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கடலோரத்தில் காற்று பலமாக வீசுவதால் அலைகள் சீற்றமும் அதிகரித்துள்ளது.

புதுவையில் நேற்று நள்ளிரவு புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் கடற்கரை சாலையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கூடுவார்கள். சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு புத்தாண்டை ஒட்டியும், அரையாண்டு தேர்வு விடுமுறையாலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

கடற்கரையில் நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதை தடுக்கும் விதமாக கடற்கரையோரம் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. புதுவை கடற்கரை சாலையிலிருந்து பாண்டி மெரினா வரை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் கால்நனைக்கக்கூட சுற்றுலா பயணிகள் இறங்குவதை போலீஸார் தடுத்து எச்சரித்து வருகின்றனர்.

புதுவை கடல் வழக்கத்தைவிட நேற்று சீற்றத்துடன் காணப்பட்டது. கடலோரத்தில் காற்று பலமாக வீசுவதால் அலைகளின் சீற்றம் அதிகமாக உள்ளது. புதுவை கடலோர காவல்படை போலீஸார் கடலில் படகில் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உப்பளம் துறைமுகத்திலிருந்து டிஜிபி ஷாலினி சிங், ஐஜி அஜித்குமார் சிங்கலா, டிஐஜி சத்திய்சந்தரம், எஸ்எஸ்பி கலைவாணன் ஆகியோர் கடலோர பாதுகாப்பு படையின் 2 படகுகளில் கடலுக்குள் சென்று ஆய்வு செய்தனர்.

கடற்கரையோரம் நீண்டதொலைவு சென்று பார்வையிட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். விடுதிகள் நிரம்பின- நகரெங்கும் போக்குவரத்து நெரிசல் சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகையால் விடுதி அறைகள் நிரம்பி உள்ளன. நகரெங்கும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. பல சிக்னல்களைக் கடக்க நெடுநேரம் காத்திருக்கவேண்டிய சூழல் உள்ளது. ஹோட்டல்கள், உணவகங்களில் கடும் கூட்டம் அலைமோதுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து