முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூருவில் விமான கண்காட்சி அடுத்த மாதம் 10-ந் தேதி தொடக்கம்

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2025      இந்தியா
air 2025-01-03

Source: provided

பெங்களூரு: பெங்களூருவில் விமான கண்காட்சி அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்குகிறது.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை என இதுவரை 14 தடவை இந்திய ராணுவம் சார்பில் விமான கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2023-ம் ஆண்டு விமான கண்காட்சி நடந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு விமான கண்காட்சி பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் நடைபெற இருக்கிறது. அடுத்த மாதம்(பிப்ரவரி) 10-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி வரை 5 நாட்கள் இந்த விமான கண்காட்சி நடக்கிறது.

தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விமான கண்காட்சி நடைபெற உள்ளது. மேலும் விமான கண்காட்சி நடைபெறும் 5 நாட்களும் காலை ஒருமுறையும், மதியம் ஒருமுறையும் என 2 முறை விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. இது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும். இதற்கான ஏற்பாடுகளை இந்திய ராணுவ அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து