முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் 2,569 ஏக்கரில் அமையும் விமான நிலையம் ஆய்வு அறிக்கை வெளியீடு

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2025      இந்தியா
sabarimala 2025-01-03

Source: provided

கோட்டயம்: சபரிமலை விமான நிலையம் 2,569 ஏக்கரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலையம் அமைக்கும் பட்சத்தில் 3.4 லட்சம் மரங்கள் வெட்டப்பட வேண்டியிருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆய்வு அறிக்கையை கோட்டயம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கேரளாவில் அய்யப்பன் கோவிலுக்கு ஆண்டு தோறும் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் விமான நிலையம் அவசியம் என்பது அங்குள்ளோரின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இதையடுத்து, அங்கு சர்வதேச கிரீன்பீல்டு விமான நிலையம் 2,569 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக, மணிமலா மற்றும் எரிமேலி (தெற்கு) கிராமங்களில் இருந்து 1039.876 ஏக்கர் நிலங்கள் விமான நிலைய கட்டுமான பணிக்காக கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விமான நிலையம் அமைக்கும் பணிகள் குறித்து கோட்டயம் மாவட்ட நிர்வாகம் சமூக தாக்க மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:- விமான நிலையம் அமைக்க மணிமலா மற்றும் எரிமேலி (தெற்கு) கிராமங்களில் இருந்து மட்டும் 1,039.876 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட வேண்டும். மொத்தம் 3.4 லட்சம் மரங்கள் வெட்டப்பட வேண்டியிருக்கும். அவற்றில் 3.3 லட்சம் ரப்பர் மரங்கள், 2,492 தேக்கு, 2,247 காட்டு பலாமரங்கள், 828 மகோகனி, 1,131 பலாமரங்கள், 184 மாமரங்கள் அகற்றப்பட வேண்டியிருக்கும்.

சில வழிபாட்டுத்தலங்களும் இடிக்கப்பட வேண்டியிருக்கும். அவற்றுக்கான மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. விமான நிலைய கட்டுமான பணிகள் மூலமாக 347 குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்படும். அவர்களில் 238 குடும்பங்கள் செருவேலி எஸ்டேட் பகுதியில் பணியாற்றும் குடும்பங்களாகும். விமான நிலையம் அமைக்கப்பட்டால் உள்ளூர் வணிகம் மேம்படும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் உயரும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து