முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உங்களுக்கு ரத்தம், எங்களுக்கு தக்காளி சட்னியா: குஷ்பு கேள்வி

சனிக்கிழமை, 4 ஜனவரி 2025      தமிழகம்
Khushpu 2023-10-04

Source: provided

சென்னை : தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் போது உங்களுக்கு வந்தால் மட்டும் ரத்தம், எங்களுக்கு தக்காளி சட்னியா என்று தி.மு.க.,வுக்கு நடிகை குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து மதுரையில் பா.ஜ.. மகளிர் அணியினர் தடையை மீறி நீதி பேரணி செல்ல முயன்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தேசிய மகளிர் ஆணைய மாஜி உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சென்னையில் நடிகை குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:- 

பாலியல் குற்றங்களில் இது அந்த மாநிலம், இந்த மாநிலம் என்று அரசியலில் கம்பேர் செய்யாதீர்கள். நான் இப்போது தமிழகத்தில் இருப்பதால் தமிழகத்தை பற்றியே தான் அதிகம் பேசுவேன். ஏன் என்றால் இது பா.ஜ., தி.மு.க., அ.தி.மு.க., என்று எதுவும் கிடையாது. பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று நாங்கள் சொல்லிக் கொண்டு வருகிறோம். இங்கு தமிழகத்தில் அவர்கள் ஆட்சியில் நடக்கும் போது போராட்டம் பண்ணமாட்டார்கள். எதிர்க்கட்சியாக தி.மு.க., இருக்கும் போது என்ன செய்தது? ஸ்டாலின் என்ன கேட்டார். அரசியல் பண்ணாமல் அவியலா பண்ண முடியும் என்றார். அவர் மட்டும் பண்ணும்போது அவியல் செய்வீர்கள். நாங்கள் பண்ணும் போது வேறமாதிரி இருக்கிறதா உங்களுக்கு? ஏன் உங்களுக்கு வந்தால் மட்டும் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?. என்ன வகையில் நியாயம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து