முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் எச்.எம்.பி.வி. பரவலுக்கு சீனா காரணமா? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்

திங்கட்கிழமை, 6 ஜனவரி 2025      இந்தியா
HMPV 2025-01-06

Source: provided

சென்னை: இந்தியாவில் எச்.எம்.பி.வி. வைரஸ் பரவலுக்கு சீனா காரணமா? என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.

சீனாவில், மனிதர்களைத் தாக்கும் மெடாநியூமோவைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இந்தியாவில் 3 குழந்தைகளுக்கு இந்த எச்.எம்.பி.வி. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், உலகம் முழுவதும் மெடாநியூமோவைரஸ் எனப்படும் எச்.எம்.பி.வி. பாதிப்பு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா உள்பட பல நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில், வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளாத இரண்டு பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சீனாவில் இந்த வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதற்கும், இந்தியாவில் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெளிவாகிறது என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில், பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மூன்று மாத பெண் குழந்தைக்கும், எட்டு மாத ஆண் குழந்தைக்கும் எச்.எம்.பி.வி. பாதிப்பு உறுதி செய்யப் பட்டிருந்ததாகவும், நிமோனியா காய்ச்சல் அறிகுறிகளுடன் இரு குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பெண் குழந்தை மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகவும், ஆண் குழந்தையின் உடல்நிலை முன்னேற்றமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் அதிகரிக்கும் பாதிப்பு சீனத்தில் கடந்த சில வாரங்களாக கடுமையான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவ மனைகளில் ஏராளமான மக்கள் குவிந்து வரும் நிலையில், இதற்கு எச்.எம்.பி.வி. அல்லது மெடாநியூமோவைரஸ் என பெயரிடப்பட்டது. நுரையீரல் தொற்று பாதிப்புடன் மருத்துவமனைகளில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வருவதாகவும் சீனாவின் பல மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருவதாகவும் அங்கிருந்து தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வந்தது. தற்போது சீனாவை அடுத்து இந்தியாவிலும் இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து