முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுக்குமாடி குடியிருப்புகளில் செல்லப் பிராணிகளுக்கான கட்டுப்பாடுகள் ரத்து : சென்னை மாநகராட்சி உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜனவரி 2025      தமிழகம்
Chennai 2023 04 25

Source: provided

சென்னை : அடுக்குமாடி குடியிருப்புகளில் செல்லப் பிராணிகளுக்கான கட்டுப்பாடுகளை ரத்து செய்து சென்னை பெருநகர கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்துவரும் 78 வயது மூதாட்டியான மனோரமா ஹிதேஷி என்பவர் சென்னை பெருநகர 16-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: எனது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் வளர்த்து வருகிறேன். ஆனால் நான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கம், செல்லப் பிராணிகள் பொது வெளியில் மலம் கழித்தால் அதன் உரிமையாளர்களுக்கு  உரிமையாளர்களுக்கு   ரூ.3 ஆயிரம் வரை  அபராதம் விதிக்கப்படும். அதற்கு மேலும் அதே நிலை நீடித்தால் குடியிருப்புவாசியின் பெயர் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வளர்ப்பு பிராணிகளுக்கான விதிகளின்படி இந்த கட்டுப்பாடுகள் செல்லாது என அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை பெருநகர 16-வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் அமர்வு நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “விலங்குகள் நலவாரிய விதிகள் சட்டரீதியாக பிறப்பிக்கப்பட்டவை என்பதால் அவை தங்களைக் கட்டுப்படுத்தாது எனக்கூற முடியாது. எனவே அடுக்குமாடி குடியிருப்புகளில் செல்லப்பிராணிகள் மலம் மற்றும் சிறுநீர் கழித்தால் அபராதம் விதிக்கப்படும் என குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கொண்டு வந்துள்ள கட்டுப்பாடுகள் செல்லாது” எனக்கூறி அவற்றை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுபோல் வளர்ப்பு பிராணிகளுக்கு அபராதம் விதிக்கக்கூடாது என்றும் நீதிபதி தடை விதித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து