முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதுகு தசைப்பிடிப்பு காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலிருந்து பும்ரா விலகல்?

திங்கட்கிழமை, 6 ஜனவரி 2025      விளையாட்டு
Bumra 2023-09-08

Source: provided

லண்டன் : இங்கிலாந்து உடனான தொடரிலிருந்து இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா விலகுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தசைப்பிடிப்பு...

முதுகு தசைப் பிடிப்பு காரணமாக பார்டர்- கவாஸ்கர் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் பும்ராவினால் பந்துவீச முடியவில்லை. அதனால் இந்திய அணி மோசமாக தோல்வியுற்றது. 3-1 என ஆஸி. அணி கோப்பையை வென்றது. இருப்பினும் 32 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா தொடர் நாயகன் விருது பெற்றார். 

பி.சி.சி.ஐ. கவனம்...

இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து உடனான வெள்ளைப் பந்து கிரிக்கெட் (ஒருநாள், டி20) போட்டியில் விளையாடவிருக்கிறது. 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் விளையாட இங்கிலாந்து அணி இந்தியா வரவிருக்கிறது. முதல் போட்டி ஜன.22இல் தொடங்குகிறது. சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்காக பும்ரா இங்கிலாந்து தொடரில் இருந்து விலகுவதாக பிசிசிஐ கவனம் செலுத்தி வருகிறது.

காயம் குறித்து... 

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பிப்.19ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பிப்.20ஆம் தேதி இந்திய அணி வங்கதேசத்துடன் மோதுகிறது. 30 வயதாகும் பும்ரா பிஜிடி தொடரில் 150 ஓவர்களுக்கும் அதிகமாக பந்து வீசியுள்ளார். வேலைப்பழு அதிகமானதாலயே அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதென வர்ணனையாளர்கள் கூறினார்கள். பும்ராவின் காயம் எப்படி இருக்கிறதென இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பும்ராவின் நிலைமை...

கிரேட் 1 காயம் எனில் குறைந்தபட்சம் 2 அல்லது 3 வாரங்கள் தேவைப்படும். கிரேடு 2 காயம் எனில் அது குணமாக 6 வாரங்களும் கிரேடு 3 எனில் குறைந்தபட்சம் 3 மாதங்கள் தேவைப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. டி20 தொடரில் பும்ரா விளையாடமாட்டார். ஏனெனில் இந்த வருடம் டி20 உலகக் கோப்பை இல்லை. ஆனால், சாம்பியன்ஸ் டிராபி இருப்பதால் இங்கிலாந்துடனன 3இல் 2 ஒருநாள் போட்டிகளாவது பும்ரா விளையாட வேண்டும்.

பரிசோதனைக்கு பிறகே...

பும்ராவின் காயம் எந்த கிரேடில் இருப்பதென கண்டறிந்த பிறகுதான் அவர் இங்கிலாந்து உடனான தொடரில் பங்கேற்பது உறுதி செய்யப்படும். பிப்.12ஆம் தேதி கடைசி ஒருநாள் போட்டியிலாவது பும்ரா விளையாடுவாரா என அவரது உடல்நிலை பரிசோதைக்குப் பிறகே தெரியவருமென பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து