முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் வேட்புமனுத் தாக்கல் வரும் 17-ம் தேதி தொடக்கம்

செவ்வாய்க்கிழமை, 7 ஜனவரி 2025      இந்தியா
Election-Commision 2023-04-20

Source: provided

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அதன் படி வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 17-ம் தேதி தொடங்கவுள்ளது. 

மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் பிப்ரவரி 23ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தேர்தல் தேதியை அறிவித்துள்ளார். டெல்லியில் மொத்தம் 1.55 கோடி வாக்காளர்கள் உள்ளனர், ஆண்கள் 83.49 லட்சம், பெண்கள் 71.74 லட்சம் மற்றும் 20 முதக் 29 வயதுடையவர்கள் 25.89 லட்சம் பேர் உள்ளனர். 13,033 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறவுள்ளது. வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 17-ம் தேதி தொடங்கவுள்ளது. வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜனவரி 20ஆம் தேதி கடைசி நாளாகும். தேர்தல் நடைமுறைகள் பிப்ரவரி 10ஆம் தேதி நிறைவடையும்.

மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் பேசியதாவது.,  தலைமைத் தேர்தல் ஆணையராக எனது கடைசி செய்தியாளர்கள் சந்திப்பு இதுவாகும். மக்களவைத் தேர்தலில் உலக அளவில் அதிக வாக்காளர்களை கொண்ட நாடாக இந்தியா இருந்தது. 67.2 கோடி பேர் வாக்களித்தனர். விரைவில் 100 கோடி வாக்காளர்கள் என்ற நிலையை எட்டவுள்ளோம். தற்போது 99 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.

இந்திய வாக்காளர்கள் மிகவும் விழிப்புணர்வோடு இருக்கிறார்கள். இப்போதும் வாக்காளர் பட்டியல் குறித்து கதைகள் கிளப்பிவிடுகின்றனர். ஏறக்குறைய 70 நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் எங்களுடன் இருக்கிறார்கள். அனைத்து கோரிக்கைகள் மற்றும் எதிர்ப்புகளும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. படிவம் 7 இல்லாமல் எந்த நீக்கமும் செய்ய முடியாது. இவிஎம் நம்பகத்தன்மை இல்லை என்பதற்கான ஆதாரம் இல்லை. இதன்மூலம் மோசடிக்கு வாய்ப்பே இல்லை. உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகளில் இதனை தெளிவுபடுத்தியுள்ளது” எனத் தெரிவித்தார்.

டெல்லியில் இந்த முறை ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் தனித்தனியாக போட்டியிடுகின்றன. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரசாரத்தை தொடங்கிவிட்டது. பாஜகவும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி, டெல்லியில் ஆட்சிக்கு வந்தால், மாதந்தோறும் மகளிர் உதவித் தொகையாக பெண்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து