முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மேலூரில் இருந்து மதுரைக்கு பொதுமக்கள் நடைபயணம்

செவ்வாய்க்கிழமை, 7 ஜனவரி 2025      தமிழகம்
tangsta

Source: provided

மதுரை: டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய கோரி 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நடைபயணமாக மேலூரில் இருந்து மதுரைக்கு சென்றனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, அ.வல்லாளபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்கள் அடங்கிய சுமார் 5 ஏக்கரில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் சிங்க் நிறுவனத்துக்கு ஒப்புதல் அளித்தது. இதற்கு அப்பகுதி மக்கள், விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி கிராமமக்கள், விவசாயிகள் மட்டுமின்றி அரசியல் கட்சியினரும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில் மேலூர் பகுதி ஒரு போக பாசன விவசாயிகள் மற்றும் மேலூர் தொகுதி மக்கள் ஒன்றிணைந்து மதுரை, திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள சிக்கம்பட்டி டோல்கேட் பகுதியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் நடை பயணமாக சென்று தல்லாகுளம் மத்திய தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தனர். இதன்படி நேற்று காலை சுமார் 10 மணி அளவில் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர்.

பின்னர் அங்கிருந்து நடைபயணம் செல்ல முயன்ற போராட்டக்காரர்களிடம் மதுரை காவல்துறை எஸ்.பி. அரவிந்த் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களை வாகனங்களில் சென்று மத்திய தபால் நிலையத்தில் போராட்டம் நடத்துமாறு வலியுறுத்தினர். ஆனாலும் விவசாயிகள் பொதுமக்கள் அதை கேட்கவில்லை. நடை பயணமாகவே சென்று மத்திய தபால் நிலையத்தை முற்றுகையிட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்வோம் என்று உறுதியாக கூறிவிட்டனர். இதனால், போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. பின்னர் தள்ளு- முள்ளும் ஏற்பட்டது.

இந்த நிலையில் காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து தங்களது நடை பயணத்தை தொடங்கினர். வழி நெடுகிலும் ஆங்காங்கே திரண்டு இருந்த விவசாயிகள், பொதுமக்களும் நடை பயணத்தில் இணைந்து கொண்டனர். வேளாண்மை கல்லூரி ஒத்தக்கடை, உத்தங்குடி,மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மாட்டுத்தாவணி வழியாக தல்லாகுளம் மத்திய தபால் நிலையம் நோக்கி சென்றனர். அவர்கள் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

மேலூர் பகுதியில் இத்திட்டத்தை கொண்டு வரக்கூடாது. இத்திட்டத்தை முழுமையாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். அதுவரை போராட்டம் ஓயாது. இத்திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யவில்லை என்றால் இன்னொரு ஜல்லிக்கட்டு போராட்டமாக மாறும். விவசாயிகள் இளைஞர்கள் பெண்களை மாணவர்களை திரட்டி தமிழகம் முழுவதும் இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

நடைபயணத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழிநெடுகிலும் ஆங்காங்கே குளிர்பானம், உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. நடை பயணத்தை ஒட்டி சித்தம்பட்டி டோல்கேட் முதல் தல்லாகுளம் மத்திய தபால் நிலையம் வரையிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மதுரை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலூர் தொகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் தன்னெழுச்சியாக பங்கேற்ற இந்த நடை பயண போராட்டம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய

முன்னதாக தடையை மீறி பேரணியாகச் சென்றவர்களை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வாகனங்களில் அமைதியான முறையில் செல்லுமாறு கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைதியான முறையில் போராட வேண்டும் என பேரணியில் ஈடுபட்டவர்களிடம் கோரிக்கை வைத்திருப்பதாகவும், பேரணியை கைவிட்டு வாகனத்தில் புறப்பட்டுச் செல்ல வேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின பல்வேறு கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் மேலூர் நோக்கி பேரணியாக வந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலூரில் , மருந்தகம், உணவகம் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது  குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து