முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொலைபேசி மூலம் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் : மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை

வியாழக்கிழமை, 9 ஜனவரி 2025      தமிழகம்
Boom

திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசியால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தின் மையப்பகுதியான கொக்கிரகுளம் பகுதியில் தாமிரபரணி நதிக்கரையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருநெல்வேலி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் போன் செய்து கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். இதனைதொடர்ந்து காவல் உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையில் ஈடுபட்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவினர்சோதனையில் ஈடுபட்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் ஆட்சியர் அலுவலகத்தின் பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்களில் பத்துக்கு மேற்பட்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காவல் கட்டுப்பாட்டறைக்கு போன் செய்த மர்ம நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து