எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - சென்னை மெரினா கடற்கரையில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கொடி ஏற்றி வைக்கிறார்.
தமிழக அரசு சார்பில், சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு 26-ம் தேதி (நாளை ) குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. விழாவிற்கு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலாளர் சண்முகம் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார். தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்.
விழா மேடைக்கு அருகே நடப்பட்டுள்ள உயரமான கம்பத்தில் காலை 8 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றுகிறார். அப்போது, விமானப்படை ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து வந்து, அந்த பகுதியில் மலர்தூவும்.
அதைத்தொடர்ந்து, ராணுவம், கடற்படை, விமானப் படையினரின் அணிவகுப்பு நடத்தப்படும். பின்னர், போலீஸ் படைகள், கடலோர பாதுகாப்பு குழு, ஆண், பெண் தமிழ்நாடு கமாண்டோ படை, குதிரைப்படை, சிறைத்துறை படை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படையின் அணிவகுப்பு நடைபெறுகிறது. அதை கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக்கொள்வார்.
அதை தொடர்ந்து, வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார். கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், கள்ளச்சாராயத்தை தடுப்பதில் சீரிய பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார். இந்த விழாவையொட்டி, தமிழக அரசு துறைகள் சார்பாக அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடத்தப்படும். இதில் சிறப்பாக செயல்பட்ட துறைக்கு பரிசு வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில், சபாநாயகர் தனபால், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள், அமைச்சர்கள், அரசு செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பல நாட்டு தூதரக அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த ஆண்டு, கொரோனா தொற்று நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாகவும் மாவட்டந்தோறும் சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் சால்வை அணிவித்து, உரிய மரியாதை அளிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கூட்டத்தை தவிர்க்கும் வகையில், இந்த ஆண்டு, பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிக்குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோர் விழாவினை நேரில் காண வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி, வானொலியில் கண்டு, கேட்டு மகிழுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 1 week ago |
-
தமிழக சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும்? சபாநாயகர் அப்பாவு தகவல்
06 Jan 2025சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வருகிற ஜன. 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டசபையில் இருந்து கவர்னர் வெளியேறியது ஏன்? ஆளுநர் மாளிகை விளக்கம்
06 Jan 2025சென்னை: சட்டசபை கூட்டத்தொடரில் உரையாற்றாமல் கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்ற நிலையில்அதுகுறித்து கவர்னர் மாளிகை விளக்கமளித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-01-2025.
06 Jan 2025 -
இந்தியாவில் பரவியது எச்.எம்.பி.வி. வைரஸ்: 3 குழந்தைகளுக்கு தொற்றை உறுதி செய்தது மத்திய அரசு
06 Jan 2025புதுடெல்லி: சீனாவை அடுத்து தற்போது இந்தியாவில் பரவியுள்ளது எச்.எம்.பி.வி. வைரஸ் பாதிப்பு.
-
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் 7 மாகாணங்களில் அவசரநிலை: பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு
06 Jan 2025நியூயார்க் : கடும் பனிப்பொழிவால் அமெரிக்காவின் பல மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல மாகாணங்கள் அவசர நிலையை அறிவித்துள்ளன.
-
சட்டசபையில் நடந்தது என்ன? சபாநாயகர் அப்பாவு விளக்கம்
06 Jan 2025சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கவர்னர் வெளியேறியது குறித்து பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களின் கேள்விக்கு விளக்கமளித்துள்ளார்.
-
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்கள 6.36 கோடி பேர் அதிக வாக்காளர்களில் சோழிங்கநல்லூர் முதலிடம்
06 Jan 2025சென்னை: இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியான நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்கள 6.36 கோடி பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய கீதத்தை அவமதித்ததே கவர்னர் ஆர்.என்.ரவிதான் : அமைச்சர் சிவசங்கர் குற்றச்சாட்டு
06 Jan 2025சென்னை : தமிழக சட்டமன்றத்தின் மரபுகளை மாற்ற கவர்னர் முயற்சிக்கிறார் என்று குற்றஞ்சாட்டிய அமைச்சர் சிவசங்கர், தேசிய கீதத்தை அவமதிக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு எப்போ
-
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் எல்லை விரிவாக்கம்: ஆட்சேபனைகளை தெரிவிக்க ஆறு வாரங்கள் காலஅவகாசம்
06 Jan 2025சென்னை : மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் எல்லை விரிவாக்கம் தொடர்பான ஆட்சேபனைகளை தெரிவிக்க ஆறு வாரங்கள் காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
-
கவர்னர் வெளியேறியது குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
06 Jan 2025சென்னை: பேரவையில் இருந்து கவர்னர் வெளியேறியது தொடர்பாக அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.
-
28 மாவட்டங்களில் பதவி காலம் முடிந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் தமிழ்நாடு அரசு உத்தரவு
06 Jan 2025சென்னை: தமிழகத்தில் 28 மாவட்டங்களில் பதவிக்காலம் முடிவடைந்த ஊரக உள்ளாட்சிகளில், சிறப்பு அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம் வரும் 10-ம் தேதி முதல் 4 நாட்கள் இயக்க ஏற்பாடு
06 Jan 2025சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
உரையை வாசிக்காமல் போவது சிறுபிள்ளைத்தனமானது: தமிழ்நாடு கவர்னர் ரவிக்கு மரபை மீறுவதுதே வழக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
06 Jan 2025சென்னை: உரையை வாசிக்காமலேயே கவர்னர் போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மரபை மீறுவதையே தனது வழக்கமாக கவர்னர் ஆர்.என்.ரவி வைத்துள
-
ஷாம் நடிப்பில் பிப் 21-ல் வெளியாகும் அஸ்திரம்
06 Jan 2025பெஸ்ட் மூவிஸ் சார்பில் தனசண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’.
-
தமிழ்நாடு சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும் த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
06 Jan 2025சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவியை வலியுறுத்தியுள்ள த.வெ.க.
-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது ஐகோர்ட்
06 Jan 2025சென்னை : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
-
தமிழ்நாடு சட்டசபையில் இருந்து பா.ஜ.க., காங்கிரஸ் வெளிநடப்பு
06 Jan 2025சென்னை : தமிழக சட்டசபையில் இருந்து பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
சட்டசபைக்கு பேட்ஜ் அணிந்து வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
06 Jan 2025சென்னை : சட்டசபைக்கு பேட்ஜ் அணிந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வந்தனர்.
-
இனி ஒரே அட்டை மூலம் மெட்ரோ, பேருந்தில் பயணிக்க சிங்கார சென்னை பயண அட்டை அமைச்சர் சிவசங்கர் தொடக்கி வைத்தார்
06 Jan 2025சென்னை: இனி ஒரே அட்டையில் மெட்ரோ, பேருந்தில் பயணிக்க வகை செய்யும் சென்னை பயண அட்டையை பொது மக்கள் பயன்பாட்டிற்கு மாநகரப் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில், பாரத ஸ்டேட
-
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் கடந்த 2 ஆண்டுகளை தொடர்ந்து தற்போதும் சர்ச்சையில் கவர்னர்
06 Jan 2025சென்னை : தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த கவர்னர் ஆர்.என்.
-
இந்தியாவில் எச்.எம்.பி.வி. பரவலுக்கு சீனா காரணமா? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்
06 Jan 2025சென்னை: இந்தியாவில் எச்.எம்.பி.வி. வைரஸ் பரவலுக்கு சீனா காரணமா? என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.
-
போதை பொருள் கடத்தல்: மணிப்பூரில் 2 பேர் கைது
06 Jan 2025மணிப்பூர்: மணிப்பூர் மாநிலம் சூராசந்திரப்பூர் மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
கண்நீரா இசை வெளியீட்டு விழா
06 Jan 2025உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் More 4 Production தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் " கண்நீரா ".
-
ஞானசேகரின் சொத்து தொடர்பான ஆவணங்களை கேட்டு பத்திரப்பதிவு துறைக்கு சிறப்புக்குழு நோட்டீஸ்
06 Jan 2025சென்னை: ஞானசேகரின் சொத்துக்கள் குறித்து ஆவணங்கள் கேட்டு சென்னை மாநகராட்சி மற்றும் பத்திரப்பதிவு துறைக்கு சிறப்புக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
மோசமான வானிலை எதிரொலி: கொல்கத்தாவில் 60 விமானங்கள் தாமதம்
06 Jan 2025கொல்கத்தா: கொல்கத்தா விமானநிலையத்தில் மோசமான வானிலையால் 60 விமானங்கள் தாமதமாகியுள்ளது.