எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தயாரிக்க 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதிக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது தொடர்பாக எத்தகைய முடிவை எடுக்கலாம் என்பது பற்றி தீர்மானிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது.
கூட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டனர். தி.மு.க சார்பில் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி, பா.ஜ.க. சார்பில் முருகன், கே.டி.ராகவன், காங்கிரஸ் சார்பில் தங்கபாலு, ஜெயக்குமார் பங்கேற்றனர்.
பா.ம.க. சார்பில் துணை பொதுச்செயலாளர் ராதா கிருஷ்ணன், தே.மு.தி,க. சார்பில் பாலாஜி, அன்புராஜ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பாலகிருஷ்ணன், சவுந்தரராஜன், இந்திய கம்யூ. கட்சி சார்பில் முத்தரசன், வீரபாண்டியன் பங்கேற்றனர். தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், உள்துறை செயலாளர் பிரபாகர், டி.ஜி.பி. திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் பனீந்தர் ரெட்டி, அதுல்ய மிஸ்ரா, பொதுத்துறை செயலாளர் செந்தில் குமார் உள்பட உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சி உறுப்பினர்கள் மட்டுமே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.
கூட்டத்தில் நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ள யோசனை குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களின் கருத்துக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டு அறிந்தார்.
ஒவ்வொரு கட்சி சார்பிலும் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டதற்கு இணங்க அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க., கம்யூனிஸ்டு, தே.மு.தி.க. கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இதில் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை மிகவும் அவசியமாகிறது. ஆனால் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் மிகவும் வேதனை தருவதாக உள்ளது.
இந்த காலகட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ள கருத்தின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க அரசு அனுமதிக்கலாம். அதுவும் 4 மாதத்திற்கு மட்டும் தற்காலிகமாக ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம். இதை கண்காணிப்பதற்கு உள்ளூர் பிரதிநிதிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது ஆலையை திறப்பது அரசின் நோக்கம் அல்ல. ஆனால் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், உயிர் காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் ஒவ்வொரு ஆஸ்பத்திரிக்கும் தட்டுப்பாடின்றி தேவைப்படுகிறது.
சுப்ரீம் கோர்ட்டு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க யோசனை வழங்கி இருக்கும் இந்த காலகட்டத்தில் அது பற்றியும் பரிசீலிக்க வேண்டி உள்ளது. ஆலையை திறப்பது அரசின் நோக்கம் கிடையாது. ஆனாலும் 4 மாதத்துக்கு மட்டும் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் என்ற உங்களது கோரிக்கைதான் எங்களது யோசனையாகவும் உள்ளது என்றார்.
அவ்வாறு ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கும்போது அதை உள்ளூர் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்து கண்காணிக்கலாம் என்று அனைத்து கட்சி தலைவர்களும் வலியுறுத்தினார்கள். அதையும் முதல்வர் ஏற்றுக்கொண்டார்.
ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதத்துக்கு மட்டும் ஆக்சிஜன் தயாரிக்க தற்காலிகமாக அனுமதிப்பதாக அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்று ஒவ்வொரு கட்சி சார்பிலும் கேட்டுக் கொண்டனர். அதற்கும் அரசின் சார்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
கண்காணிப்பு குழுவில் உள்ளூர் பிரதிநிதிகளுடன், தூத்துக்குடி கலெக்டர் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களும் இடம் பெற வேண்டும். அவர்கள் முழுமையாக தொழிற் சாலையை கண்காணிக்க வேண்டும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.
நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் உடனடியாக அட்வகேட் ஜெனரல் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 1 week ago |
-
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது
05 Jan 2025ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை மரகத நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. ஜன.13ல் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.
-
'முபாசா-தி லயன் கிங்' திரைப்படம்: உலக அளவில் ரூ.3,200 கோடி வசூல் செய்து புதிய சாதனை
05 Jan 2025நியூயார்க் : முபாசா : தி லயன் கிங் திரைப்படம் உலக அளவில் ரூ.3,200 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
-
உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: எலான் மஸ்க் மீண்டும் முதலிடம்
05 Jan 2025நியூயார்க் : போர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக மகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் புத்தாண்டில் உலக பெரும் கோடீஸ்வரராக அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் திகழ்கிறார்.
-
திருமணமாகி இரண்டே மாதத்தில் புதுமணத் தம்பதியர் விபத்தில் பலி
05 Jan 2025சிதம்பரம் : சிதம்பரத்தில் திருமணமாகி இரண்டே மாதங்களான நிலையில் புதுமணத் தம்பதியர் விபத்தில் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மதுரை மேயரின் உறவினர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
05 Jan 2025கூடலூர் : மனைவியால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டு, பலத்த தீக்காயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதுரை மேயர் இந்திராணியின் உறவினர்
-
கல்வி மட்டுமே பலம், தலைமை பண்பை கொடுக்கும்: கவர்னர் ஆர்.என்.ரவி அறிவுரை
05 Jan 2025சென்னை : கல்வி மட்டுமே பிறருக்கு நன்மை செய்யும் பலம், தலைமை பண்பை கொடுக்கும் என மாணவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கியுள்ளார்.
-
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது : ஆண்டின் முதல் கூட்டத்தில் கவர்னர் உரையாற்றுகிறார்
05 Jan 2025சென்னை : பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. 2025-ம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது.
-
25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற சென்னை மாரத்தான்
05 Jan 2025சென்னை : சென்னையில் நேற்று நடந்த மாரத்தான் போட்டியில் 25 ஆயிரத்துக்கும் ஓட்டப்பந்தய வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றனர்.
-
மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு முன்பதிவு இன்று தொடங்குகிறது
05 Jan 2025மதுரை : மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
-
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் : தி.மு.க. அரசுக்கு சி.பி.எம். கோரிக்கை
05 Jan 2025சென்னை : அரசு ஊழியர், சத்துணவு ஊழியர், அங்கன்வாடி ஊழியர், பள்ளி-கல்லூரிகளின் ஆசிரியர்கள் ஆகியோரின் கோரிக்கைகள் மீதான தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க.
-
தொழில்முனைவோராக மாற்றும் திட்டம்: தூய்மைப் பணியாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
05 Jan 2025சென்னை : தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தில் வழங்கப்பட்ட நவீன வாகனங்களின் செயல்பாட்டை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், பணியாளர்களிடம் விவரங்களைக
-
பிரியங்கா குறித்து சர்ச்சை கருத்து: பா.ஜ.க. வேட்பாளருக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்
05 Jan 2025புதுடெல்லி : பிரியங்கா காந்தியை பற்றி பா.ஜ.க.வின் பிதூரி சர்ச்சையாக பேசியதற்கு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரியா ஸ்ரீநாத் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
-
டெல்லியில் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை ஆதரிக்க மக்கள் தயாராகி வருகின்றனர்: பிரதமர்
05 Jan 2025புதுடெல்லி : டெல்லியில் சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.க.வுக்கு ஆசி வழங்க மக்கள் தயாராகி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
பல்கலை. மாணவி வன்கொடுமை சம்பவம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
05 Jan 2025சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
-
தமிழகத்தின் உள் பகுதியில் இன்று வறண்ட வானிலை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 Jan 2025சென்னை : உள் தமிழ்நாட்டில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
டெல்லி, உ.பி. இடையே நமோ பாரத் ரயில் சேவை : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
05 Jan 2025டெல்லி : தலைநகர் டெல்லியின் இருந்து உத்தரபிரதேசத்திற்கு நமோ பாரத் ரெயில் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
-
அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட ரூ.14.60 கோடி நிதி : தமிழக அரசாணை வெளியீடு
05 Jan 2025சென்னை : அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட ரூ.14.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உரிமையாளர் கைது
05 Jan 2025விருதுநகர் : விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
-
சிந்துவெளி எழுத்து புதிரை விடுவிப்பவர்களுக்கு பரிசு : 1 மி. அமெரிக்க டாலர்கள் வழங்க முதல்வர் அறிவிப்பு
05 Jan 2025சென்னை : சிந்துவெளி எழுத்து புதிரை விடுவிப்பவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும்.
-
மம்தாவின் 69-வது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
05 Jan 2025சென்னை : மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
திடீர் உடல்நலக்குறைவு: மதுரை எம்.பி. வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி
05 Jan 2025விழுப்புரம் : மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் 4 பேர் உயிரிழப்பு
05 Jan 2025லாகூர் : பாகிஸ்தானில் நடந்த கண்ணிவெடி தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.
-
டெல்லியில் நிலவும் அதி பனி மூட்டம்: 3-வது நாளாக விமானங்கள், ரயில்களின் சேவை பாதிப்பு
05 Jan 2025புதுடெல்லி : தேசிய தலைநகர் டெல்லியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக எதிரிலிருப்பது தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவியதால் விமானம் மற்றும் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்ப
-
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கர்நாடகாவில் டி.எஸ்.பி. கைது
05 Jan 2025கர்நாடகா : கர்நாடகாவில் புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் துறை டி.எஸ்.பி. கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ஜி.எஸ்.டி. வரியால் தொழில் நிறுவனங்களுக்கு பாதிப்பு : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு
05 Jan 2025சென்னை : ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வளர்ச்சி என்று சொல்ல முடியாது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.