எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்துள்ளது. 65 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க., சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் சட்டமன்ற அ.தி.மு.க. கட்சி தலைவரை ( எதிர்க்கட்சி தலைவரை) தேர்ந்தெடுப்பதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த 7-ம் தேதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் யார்? என்பதில் காரசார விவாதம் நடைபெற்றது.
அப்போது எந்த முடிவும் எட்டப்படாமல் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிந்தது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மீண்டும் 10-ம் தேதி (நேற்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நேற்று முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு கட்டுப்பாட்டின்படி அரசு கூட்டங்கள் தவிர்த்து பிற கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி கிடையாது. எனினும் புதிய சட்டமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) கூட இருப்பதால், எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை திட்டமிட்டபடி (நேற்று)நடத்துவதற்கு அனுமதி கேட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான நா.பாலகங்கா மனு அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைப்பிடித்து தொண்டர்கள் கூட்டம் இன்றி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்படும் என்று கூறி, கூட்டத்துக்கு அனுமதி கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் தரப்பிலும் அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அ.தி.மு.க. தலைமை அலுவகலத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதை தொடர்ந்து திட்டமிட்டபடி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 9.30 மணியளவில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய 2 பேரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மொத்தமுள்ள 65 எம்.எல்.ஏக்களில் எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவராக 61 எம்.எல் .ஏக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்த ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி என்பதால் அவருக்குத்தான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக மூத்த தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.
கொங்குமண்டலம், மத்திய மண்டலம், தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் பலரும் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிவித்தனர். ஆனால் பா.ஜனதா மேலிடம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் வெளியில் தெரிவித்து வந்தனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளதால் அவர் எதிர்க்கட்சி தலைவராக வருவதுதான் சரியாக இருக்கும் என்று தெரிவித்து வந்தனர்.
61 எம்.எல்.ஏக்கள் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதால் அவரை எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுப்பதுதான் முறையாக இருக்கும் என்று யோசனை தெரிவித்தனர். கட்சியை கட்டுக்கோப்பாக கொண்டு செல்ல நீங்களும் அனுசரித்து செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர். அவர்கள் கூறிய யோசனைகளை ஓ.பன்னீர்செல்வமும் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. கூட்டத்தில், நீண்ட விவாதங்களுக்குப் பின் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இது தொடர்பாக, அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில், தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராக அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவை அடுத்து,எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தலைமை அலுவலகத்துக்கு வெளியே உற்சாகமாக அவருக்கு ஆதரவாக கோஷமிட்டனர். இம்முடிவால் ஓ.பன்னீர் செலவம் அதிருப்தியடைந்ததாக கூறப்படும் நிலையில், கூட்டம் முடிந்தபின் முதல் ஆளாக வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 2 weeks ago |
-
குடிநீர் கட்டணங்களுக்கு பசுமை வரி: கர்நாடக அரசு புதிய திட்டம்
14 Nov 2024பெங்களூரூ, ஆறுகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக குடிநீர் கட்டணங்களுடன் பசுமை வரியை விதிக்க கர்நாடக வனத்துறை முடிவு செய்துள்ளது.
-
சபரிமலையில் மண்டல கால பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது
14 Nov 2024திருவனந்தபுரம், மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.
-
ஜெயங்கொண்டம் அருகே ரூ.1000 கோடி மதிப்பில் காலணி உற்பத்தி தொழிற்சாலை: முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்
14 Nov 2024திருச்சி, ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரத்தில் 130 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் சிப்காட் தொழில் வளாகத்தில், தைவான் நாட்டை சேர்ந்த டீன் ஷூஸ் குழுமம் ரூ.1,000 கோட
-
தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்: தூத்துக்குடியில் துணை முதல்வர் உதயநிதி பேச்சு
14 Nov 2024தூத்துக்குடி, தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
-
தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி திடீர் ஆய்வு
14 Nov 2024தூத்துக்குடி: தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-11-2024.
14 Nov 2024 -
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் வருபவர்களுக்கு டேக் அறிமுகப்படுத்த முடிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
14 Nov 2024சென்னை, நோயாளிகளுடன் வருபவர்களுக்கு சிவப்பு, மஞ்சள், பச்சை, நீல வண்ண டேக் அறிமுகப்படுத்தப்படும் என்று மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரம
-
ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ சென்னை அப்பல்லோவில் அனுமதி
14 Nov 2024சென்னை, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
144 தடை உத்தரவு மீறல் வழக்கு: இம்ரான் கானை விடுதலை செய்து இஸ்லாமாபாத் கோர்ட் உத்தரவு
14 Nov 2024இஸ்லாமாபாத், 144 தடை உத்தரவு விதிமீறல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
-
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
14 Nov 2024சென்னை, தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 3-ம் கட்டமாக கள ஆய்வு ரூ.1000 கோடி மதிப்பில் சிப்காட் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்
14 Nov 2024அரியலூர்: அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 3-ம் கட்டமாக கள ஆய்வு மேற்கொள்கிறார்.
-
ஷிப்ட் முறை தேர்வு அறிவிப்புக்கு எதிர்ப்பு: உ.பி. அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு எதிராக தொடரும் மாணவர்கள் போராட்டம்:
14 Nov 2024லக்னோ, ஷிப்ட் முறை தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப்பிரதேசத்தில் அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு மாணவர்களின் போராட்டம் 4-வது நாளாக தொடர்கிறது.
-
காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பு: காங்கிரஸ் கட்சி கூட்டணி மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு
14 Nov 2024ஜம்மு: காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பை உருவாக்க காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகப் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
ஜாமின் மனு தள்ளுபடி எதிரொலி: நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
14 Nov 2024சென்னை, மதுரை ஐகோர்ட் கிளையில் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
-
குழந்தைகள் தினம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
14 Nov 2024சென்னை, குழந்தைகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பந்தல்கால் நடும் நிகழ்ச்சி: ஜனவரி 10-ல் சொர்க்கவாசல் திறப்பு
14 Nov 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆயிரங்கால் மண்டபம் அருகே பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.
-
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து
14 Nov 2024சென்னை, நாளைய உலகின் சிற்பிகளாகிய குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
-
ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் 6 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலி
14 Nov 2024பெய்ரூட், ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
-
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்க டி.ஜி.பி. உத்தரவு
14 Nov 2024சென்னை: தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
தங்கம் விலை தொடர் சரிவு: சவரனுக்கு ரூ.880 குறைந்தது
14 Nov 2024சென்னை: தங்கம் விலை நேற்றும் சவரனுக்கு ரூ.880 குறைந்து விற்பனையானது.
-
தி கார்டியன் நாளிதழ் எக்ஸ் தளத்தில் இருந்து விலகல்: எலான் மஸ்க் மீது பரபரப்பு குற்றச்சாட்டு
14 Nov 2024லண்டன், 200 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க இங்கிலாந்தை சேர்ந்த ஆங்கில செய்தி நிறுவனமான தி கார்டியன் டுவிட்டர் தளத்தில் இருந்து விலகியுள்ளது.
-
அமெரிக்க உளவுத்துறை இயக்குனராக துளசி கபார்டை நியமித்தார் டிரம்ப்
14 Nov 2024வாஷிங்டன், அமெரிக்க உளவுத்துறை இயக்குனராக முன்னாள் எம்.பி. துளசி கபார்டை நியமனம் செய்துள்ளார் டிரம்ப்.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய திருத்தம் செய்ய சிறப்பு முகாம்
14 Nov 2024சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
-
மார்க்கோ ரூபியோவை அமெரிக்க வெளியுறவு அமைச்சராக நியமனம் செய்ய டிரம்ப் பரிந்துரை
14 Nov 2024வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவு மந்திரியாக மார்க்கோ ரூபியோவை நியமிக்க டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.
-
இளங்கலை படிப்பை முன்கூட்டியே முடிக்கும் புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமல்: யு.ஜி.சி.
14 Nov 2024சென்னை, இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படும் என யு.சி.ஜி.