முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

புதன்கிழமை, 26 ஜூன் 2024      இந்தியா
Kashmir 2023 04 09

Source: provided

ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜம்மு-காஷ்மீரில் மலைப்பாங்கான மாவட்டத்தில் ஜூன் 11-12 தேதிகளில் இரட்டை பயங்கரவாத தாக்குதலில் 6 பாதுகாப்பு வீரர்கள் காயம் அடைந்தனர். இரட்டை தாக்குதல்களுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் தங்கள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். மற்றும் மாவட்டத்தில் ஊடுருவி செயல்படுவதாக சந்தேகிக்கப்படும் 4 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் குறித்து தகவல் கொடுத்தால் தலா 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்தனர்.

இநத் நிலையில் தோடா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்து பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதையடுத்து பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 1 min ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 22 min ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து