முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த மாதம் வெளியாகிறது 'ஜமா'

திங்கட்கிழமை, 22 ஜூலை 2024      சினிமா
Jama 2024 07 22

Source: provided

பிக்சர் பாக்ஸ் கம்பெனி, ‘கூழாங்கல்’ தயாரிப்பாளர்களின் 'ஜமா'

இந்த படத்தை பாரிஇளவழகன் நடித்து இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அம்முஅபிராமி, சேத்தன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். படத்தை பற்றி இயக்குனரும் நடிகருமான பாரி இளவழகன் பத்திரிக்கையாளரிடம் கூறியதாவது ! இந்த படம் ஒரு மிகச்சிறந்த தெருக்கூத்து பற்றின படம்.

ஒரு தெருக்கூத்தில் தெருக்கூத்து தலைவராக எப்பொழுதுமே ஆண்கள்தான் இருப்பார்கள் அவர்கள்தான் வாத்தியார் அவர்களுக்கு கீழ்தான் எல்லாமே நடக்கும் .

அப்படி இருக்கும்போது ஒரு பெண்ணால் வேஷம் கட்டும் நபர் ஏன் தலைவராக வரக்கூடாது. அப்படி வருவது என்றால் அதற்குள் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதே இப்படம் உண்மையாகவே தெருக்கூத்து கலைஞர்களிடம் பேசி அவர்களுடன் பழகி அவர்களுக்கு நேரம் கிடைக்கும்போது மட்டுமே ஷூட்டிங் செய்தோம்.

தெருக்கூத்து நடக்கும்போது லைவ் மியூசிக் செய்துள்ளோம் படத்தில் 4 பாடல்கள் உள்ளன. இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்தது எங்களுக்கு மேலும் மகிழ்ச்சியாக இருந்தது .படத்தில் சேத்தன் சார் நடித்த பிறகு இந்த கதாபாத்திரத்தில் அவரை தவிர வேறு யாரும் அவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது என்பதை தத்ரூபமாக நடித்துள்ளார் சேத்தன் சார்.

வருட முழுவதும் பிஸியாகவே இருக்கும் தெருக்கூத்து கலைஞர்கள் அவர்களுக்கு கிடைக்கும் நேரத்தில் தான் நாங்கள் சூட்டிங் செய்தோம் அவ்வளவு பிஸியாக இருக்கிறார்கள் என்றார். இந்த படம் ஆகஸ்ட் இரண்டாம் தேதி திரைக்கு வர உள்ளது அனைவரும் பாருங்கள் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து