முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.61 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கம் பறிமுதல்

திங்கட்கிழமை, 22 ஜூலை 2024      தமிழகம்
Chennai Airport

Source: provided

சென்னை : சென்னை விமான நிலையத்தில் ரூ.2.61 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து காபி மேக்கர் இயந்திரத்தில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

துபாயில் இருந்து பயணிகள் விமானம் சென்னைக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது, சுற்றுலா விசாவில் துபாய் சென்றுவிட்டு வந்த விக்னேஸ்வரன் ராஜா (35) என்ற பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் வைத்திருந்த கைப்பையை அதிகாரிகள் சோதனை செய்த போது, காப்பி மேக்கர் இயந்திரம் ஒன்று இருந்தது.

அந்த காபி தயாரிக்கும் இயந்திரம் வழக்கத்தைவிட எடை அதிகமாக இருந்ததால், அதனை திறந்து சோதனை செய்தனர். அதில், ரூ.2.61 கோடி மதிப்புள்ள 4 கிலோ எடை கொண்ட 2 தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து