முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சின்ன விஷயத்திற்கும் ஏ.ஐ. பொய் சொல்லும் : எச்சரிக்கை விடுத்த எலான் மஸ்க்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2024      உலகம்
Elon-Musk 2023 03 28

Source: provided

வாஷிங்டன் : சின்ன விஷயங்களில் கூட பொய் சொல்லும் அளவுக்கு ஏ.ஐ. தொழில்நுட்பம் அறிவூட்டப்பட்டு இருக்கிறது என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ஏ.ஐ. தொழில்நுட்பம் பற்றி தொடர்ச்சியாக கருத்து பதிவிட்டு வருகிறார். அந்த வரிசையில், அவர் ஏ.ஐ. ஏற்படுத்தக் கூடிய அபாயங்கள் பற்றி மனம்திறந்துள்ளார். 

அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில், ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் சமீபத்திய வளர்ச்சி கவலை கொள்ள செய்கிறது. சின்ன விஷயங்களில் கூட பொய் சொல்லும் அளவுக்கு ஏ.ஐ. தொழில்நுட்பம் அறிவூட்டப்பட்டு இருக்கிறது.

தற்போது சின்ன விஷயங்களாக இருப்பவை, நாளடைவில் பெரிதாக மாறும். மேலும் மக்கள் இதனை அதிகளவு பயன்படுத்த துவங்கும் போது இன்னும் அதிகளவு பொய் சொல்லும் என்று தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், குறைந்து வரும் குழந்தை பிறப்பு எண்ணிக்கையும் தனக்கு கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது. கடந்த கால வரலாறுகளின் குழந்தை பிறப்பு குறைவதே நாகீரக வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. இதில் இருந்து மனித இனம் மீண்டுவரவில்லை எனில், இதே நிலை மீண்டும் எழுவதை யாரும் தடுக்க முடியாது என்று தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து