தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய கல்விக் கொள்கை விவகாரம்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்துக்கு மத்திய அமைச்சர் பதில்

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2024      இந்தியா
Dharmendra Pradhan 2023 06 21

Source: provided

புதுடெல்லி : தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் கருத்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துள்ளார். மேலும் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தேசிய கல்வி கொள்கைக்கு அடிபணிய மறுத்ததற்காக சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு நிதி மறுக்கப்படுகிறது என்று மத்திய அரசின் சமக்ரா சிக்ஷா திட்டத்தில் தமிழகத்திற்கு நிதி தர மறுப்பதை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி நிலவுவது என்பது ஜனநாயக நாட்டில் வரவேற்கத்தக்கது. மாநிலங்கள் ஒன்றுக்கொன்று எதிர் கருத்து தெரிவிப்பது, அரசியலமைப்பு மற்றும் ஒன்றுபட்ட இந்தியாவின் மதிப்புகளுக்கு எதிரானது. இந்திய மக்களின் ஞானத்தைக் கொண்டும், பலதரப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டது தேசிய கல்விக்கொள்கை. தேசிய கல்விக்கொள்கைக்கு உங்கள் 'கொள்கை ரீதியான' எதிர்ப்பில் நான் சில கேள்விகளை எழுப்ப விரும்புகிறேன். தமிழ் உள்ளிட்ட தாய்மொழியில் கல்வி கற்பதை எதிர்க்கிறீர்களா?  தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தேர்வு நடத்துவதை எதிர்க்கிறீர்களா?  தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடப்புத்தகங்கள் மற்றும் உள்ளடக்கம் உருவாக்கப்படுவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா?  தேசிய கல்விக் கொள்கையின் முழுமையான, சமமான மற்றும் உள்ளடக்கிய கட்டமைப்பை நீங்கள் எதிர்க்கிறீர்களா?  தேசிய கல்விக் கொள்கை கொண்டுள்ள சமத்துவம் மற்றும் பாரபட்சமற்ற கட்டமைப்புகளை எதிர்க்கிறீர்களா? அப்படி இல்லாவிட்டால், அரசியல் ஆதாயத்தை தவிர்த்து விட்டு தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை முன்னிறுத்தி புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து