முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செஸ் ஒலிம்பியாட் தொடர்: இந்திய ஆடவர், மகளிர் அணி தங்கம் வென்று புதிய சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2024      விளையாட்டு
Chess 2023-10-15

Source: provided

புடாபெஸ்ட் : செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய ஆடவர், மகளிர் அணி தங்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளது.

முதல் முறையாக... 

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இறுதி சுற்றில் இந்திய அணி ஸ்லோவோனியாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா தரப்பில் குகேஷ் மற்றும் அர்ஜூன் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதன் மூலம் இந்திய அணி செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. ஸ்ரீநாத் நாராயணன், குகேஷ்,பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, விதித் மற்றும் பெண்டாலா ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது.

மகளிர் அணியும்...

இதேபோல் இந்த தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடி வந்த அபிஜித் தலைமையிலான இந்திய மகளிர் அணி இறுதிச்சுற்று ஆட்டத்தில் அஜர்பைஜானுக்கு எதிராக விளையாடியது. இதில் திவ்யா, வந்திகா மற்றும் ஹரிகா ஆகியோர் வெற்றி பெற்று இந்திய அணி தங்கப்பதக்கம் வெல்ல உதவினர். திவ்யா, வந்திகா, ஹரிகா, தானியா மற்றும் அபிஜித் (கேப்டன்) ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக இந்திய மகளிர் அணியும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து