முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்புடன் மீண்டும் விவாதம் நடத்த விருப்பம்: கமலா ஹாரிஸ் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2024      உலகம்
Kamala-Harris 2023 07-14

Source: provided

வாஷிங்டன் : டிரம்புடன் மீண்டும் விவாதம் நடத்த விரும்புகிறேன் என கமலா ஹாரிஸ் கூறினார். இந்த நிலையில் கமலா ஹாரிஸின்  அழைப்பை டிரம்ப் நிராகரித்துள்ளார். 

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர்  தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள்  அதிபர் டிரம்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் துணை  அதிபர்  கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர். 

இவர்கள் இருவருக்கும் இடையேயான முதல் நேரடி விவாதம் கடந்த 10-ம் தேதி நடந்தது. பல்வேறு விவகாரங்களில் இருவருக்கும் இடையில் அனல்பறக்கும் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் டிரம்பை விட கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்பட்டதாக கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

இதனையடுத்து மீண்டும் விவாதம் நடத்த டிரம்புக்கு கமலா ஹாரிஸ் அழைப்பு விடுத்தார். ஆனால் விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் என டிரம்ப் திட்டவட்டமாக கூறி விட்டார். இந்த நிலையில் மிச்சிகனில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய கமலா ஹாரிஸ்,

டிரம்புடன் மீண்டும் விவாதம் நடத்த விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறேன் என கூறினார். 

இந்நிலையில் விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் என டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதன்படி நவம்பர் 5-ம் தேதி நடக்க உள்ள அதிபர் தேர்தலில் ஓட்டளிக்க  வாக்காளர்கள் தயாராகி விட்டனர். இரண்டாவது விவாதம் மிகவும் தாமதமாகி விட்டது என்று கூறியுள்ள டிரம்ப், கமலா ஹாரிஸின் அழைப்பை நிராகரித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து