முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் பயங்கரவாதிகளை விடுதலை செய்ய மாட்டோம் : மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2024      இந்தியா
Amit-Shah 2023-11-17

Source: provided

நவ்ஷேரா : காஷ்மீரில் கல்வீசி தாக்கியவர்கள் மற்றும் பயங்கரவாதிகளை விடுதலை செய்ய மாட்டோம் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா பிரச்சாரத்தின் போது  திட்டவட்டமாக தெரிவித்தார்.  

ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேரா தொகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு, பா.ஜ.க. வேட்பாளர் ரவீந்தர் ரெய்னாவை ஆதரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

அவர்கள் (தேசிய மாநாட்டு கட்சி- காங்கிரஸ் கூட்டணி) ஜம்மு காஷ்மீரில் ஆட்சியமைத்தால் கல்வீசி தாக்கியவர்கள் மற்றும் பயங்கரவாதிகளை விடுதலை செய்ய விரும்புகிறார்கள். தேர்தல் அறிக்கையிலும் இந்த வாக்குறுதியை அளித்துள்ளார்கள். 

ஜம்மு மலைப் பகுதியில் பயங்கரவாதம் புத்துயிர் பெறுவதைப் பற்றி பரூக் அப்துல்லா பேசுகிறார். ஆனால், இது மோடி அரசாங்கம், பயங்கரவாதத்தை அழித்து ஆழமாக புதைப்போம் என்பதை அவருக்கு தெரிவிக்க விரும்புகிறேன். மேலும், பயங்கரவாதிகளோ, கல்வீசி தாக்கியவர்களோ விடுதலை செய்யப்பட மாட்டார்கள். 

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரசும் முனைப்பு காட்டுகின்றன. ஆனால், பயங்கரவாதத்தை ஒழிக்கும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்பதை பரூக் அப்துல்லாவுக்கும் ராகுல் காந்திக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். 

நான் எனது சிங்கங்களுடன் (ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள்) பேசுவேன், பாகிஸ்தானுடன் அல்ல. இனி ஜம்மு காஷ்மீரில் பதுங்கு குழிகள் போன்ற கட்டமைப்புகள் தேவைப்படாது. ஏனென்றால், எல்லை தாண்டிய துப்பாக்கி சூடு நடத்த யாருக்கும் அதிகாரம் கிடையாது. எல்லைக்கு அப்பால் இருந்து அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தினால், நாம் குண்டு வீசி பதிலடி கொடுப்போம். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து