முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை, தென்காசியில் நில அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் தகவல் : தேசிய நில அதிர்வு மையம் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2024      தமிழகம்
EarthQuake-2023-04-03

Source: provided

நெல்லை : நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் தென்காசி பகுதிகளில் நில அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் பாபநாசம், விக்கிரமசிங்கபுரம்,கோட்டைவிளைப்பட்டி கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு உள்ளிட்ட இடங்களிலும், அதே போல் தென்காசி மாவட்டத்தில் கடையம், பொட்டல்புதூர், முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, வாகைக்குளம், கல்யாணிபுரம், கடையம், உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் திடீரென நில அதிர்வை உணர்ந்துள்ளனர். 

இதனால் பொதுமக்கள் பீதியில் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். வீடுகள் பயங்கர சப்தத்துடன் குலுங்கியதால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். சரியாக 12 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். 

இந்த குறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் கூறுகையில், 

நில அதிர்வு உள்ளிட்ட சம்பவங்கள் இருந்தால் நில நடுக்க ஆணையம் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடும். இதுவரை அதிகாரப்பூர்வ நில அதிர்வு குறித்து தகவல் கிடைக்கப் பெறவில்லை. தகவல் குறித்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தார். 

மேலும் இதே போல் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் பல கிராமங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், தற்போது வரை, அரசின் நில அதிர்வியல் இணையதளத்தில் பதிவுகள் எதுவும் வரவில்லை. களஅலுவலர்கள் அப்பகுதிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தமிழகத்தில் எங்கும் நில அதிர்வு கண்டறியப்படவில்லை என நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது.       

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து