முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலில் 42.31 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி: இலங்கை அதிபரானார் அனுர குமார திசநாயக : எளிமையான முறையில் இன்று பதவியேற்பு விழா

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2024      உலகம்
Anura-Dissanayake 2024-03-2

Source: provided

கொழும்பு : இலங்கை அதிபர் தேர்தலில் 42.31 சதவீத வாக்குகளுடன் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றுள்ளார். அவர் இன்று பதவியேற்க உள்ளார்.

வாக்குப்பதிவு... 

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. மொத்தம் 75 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் அனுரா குமார திசநாயகே தொடர்ந்து முன்னிலை பெற்றார். அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோர் பின்னடைவை சந்தித்தனர்.

கடும் நெருக்கடி....

கடந்த சில ஆண்டுகளாக விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றால் இலங்கை கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. மக்களும் அவற்றை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த சூழலில், பொருளாதார வளர்ச்சியே இலங்கையில் தீர்வு ஏற்பட வழிவகுக்கும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது அனுரா குமார திசநாயகே கூறினார்.

தொடர்ந்து முன்னிலை...

அவருக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்து உள்ளது என வெளிப்படும் வகையில் தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகின்றன. தொடர்ந்து அவர் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்றார். இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் 42.31 சதவீத வாக்குகளுடன் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றுள்ளார். 

2-வது இடத்திற்கு... 

இதுபற்றி இலங்கை தேர்தல் ஆணையம் நேற்று முறைப்படி அறிவித்து உள்ளது. அதில், மார்க்சிஸ்டு தலைவரான அனுரா குமார திசநாயகே (வயது 55) வெற்றி பெற்றுள்ளார். அதிபர் ரணில் விக்ரமசிங்கே தோல்வியடைந்து உள்ளார் என தெரிவித்து உள்ளது. இந்த தேர்தலில், எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசா 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார். ரணில் விக்ரமசிங்கே 3-வது இடத்திற்கு சென்றுள்ளார்.

அதிகாரப்பூர்வமாக... 

முதல் சுற்றில் 56,34,915 (42.3 சதவீதம்) வாக்குகளுடன் திசநாயகே முன்னிலை பெற்றார். பிரேமதாசா 43,63,035 (32.76 சதவீதம்) வாக்குகளுடன் 2-வது இடம் பெற்றார். இந்நிலையில், 2-வது சுற்றுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்தது. இதில், திசநாயகே வெற்றி பெற்றுள்ளார் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதனுடைய வலைதளத்தில் அதிகாரப்பூர்வ தகவலை தெரிவித்து உள்ளது. முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தி தலைவா் சஜித் பிரேமதாசவைவிட 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக கூடுதலாக வாக்குகளைப் பெற்று அநுரகுமார திசாநாயக வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பதவியேற்பு...

இதையடுத்து, இன்று (திங்கள்கிழமை - செப். 23) எளிமையான முறையில் பதவியேற்பு நடைபெற உள்ளதாகவும், அதில் அநுரகுமார திசாநாயக இலங்கை அதிபராக பதவியேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து