முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திறமை, உழைப்புக்கு வாய்ப்பு பா.ஜ.க.வில் மட்டுமே கிடைக்கும் : நிர்மலா சீதாராமன் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2024      தமிழகம்
Nirmala 2024-03-22

Source: provided

சென்னை : திறமை உழைப்புக்கு பா.ஜ.க. போதுமான வாய்ப்பு வழங்கும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.  

சென்னை கொட்டிவாக்கம் கடற்கரை பகுதியில் நடந்த பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை முகாமில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது, 

தமிழகத்திலும் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும். அதற்கான பணிகள் 6 ஆண்டுகளாக பெரிய அளவில் நடக்கிறது. சில குடும்பங்களுக்கு மட்டும் பதவி என்பது பா.ஜ.க. வில் இருக்காது. எளியவரும் பெரிய தலைவர் ஆகலாம்.

மிகப்பெரிய கட்சி என்றால் அது பா.ஜ.க.தான். பெரிய கட்சி என்றால் அதிக உறுப்பினர்கள் இருக்கறார்கள் என்று அர்த்தம். ஜாதி, மதம், சிறியவர், பெரியவர், தாழ்ந்தவர், உயர்ந்தவர் என்ற வித்தியாசமும் இல்லாமல் அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கும் கட்சி பா.ஜ.க. மட்டும் தான்.

மகன், மாமா, மாப்பிள்ளை தான் கட்சியின் தலைவராக இருக்க வேண்டுமா என்ன? பா.ஜ.க. திறமை உழைப்புக்கு போதுமான வாய்ப்பு வழங்கும். எல்லோருக்கும் சமமான வாய்ப்பு வழங்கும். 

மீனவர்களுக்கு என தனி அமைச்சகம் கொண்டு வந்தது பிரதமர் மோடிதான். பா.ஜ.க. ஆட்சியில் மீனவர்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. மீனவர்கள் ஏற்றுமதியில் கவனம் செலுத்தினால், அவர்களுக்கு 3 மடங்கு லாபம் கிடைக்கும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து