முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் புகாருக்கு ஆளான மலையாள நடிகர் எடவெலா பாபு கைதாகி விடுதலை

புதன்கிழமை, 25 செப்டம்பர் 2024      சினிமா
Edavela-Babu 2024-03-25

Source: provided

கொச்சி : பிரபல மலையாள நடிகர் எடவெலா பாபு, கற்பழிப்பு வழக்கில் கைதாகி பின்னர் ஜாமினில் வெளியே வந்தார்.

மலையாள திரை உலகில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக விசாரித்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை கடந்த மாதம் வெளியானது. இதைத் தொடர்ந்து நடிகைகள் பலரும், தாங்கள் எவ்வாறு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டோம் என வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

அதன் அடிப்படையில் வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன. இதன்படி புகாருக்கு ஆளான நடிகர் எடவெலா பாபு மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இவர் மலையாள திரைப்பட உலகில், 1982 முதல் நடித்து வருகிறார். 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 

கொச்சியை சேர்ந்த நடிகை கூறியிருந்த பாலியல் புகார் அடிப்படையில் பாபு மீது  பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. அதை தொடர்ந்து  போலீசார் நேற்று அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

கொச்சி கடலோர போலீஸ் தலைமையகத்தில்,3 மணி நேர நீண்ட விசாரணைக்கு பின் அவருக்கு ஜாமின் கிடைத்தது. இவர், முன் ஜாமின் பெற்றிருந்ததால் அவர் வெளிவந்தார்.  விரைவில், பாபுவுக்கு எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது. 

பாபு மீது புகார் அளித்த நடிகையே, நடிகர் முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பில்ல ராஜூ, வக்கீல் சந்திரசேகரன் மற்றும் படத் தயாரிப்பாளர்கள் நோபிள் மற்றம் விச்சு ஆகியோர் மீது வழக்கு தொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து