முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர புதிய சட்டம் : அதிபர் ஜோ பைடன் தகவல்

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2024      உலகம்
Joe-Biden 2024-03-27

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர சட்டம் கொண்டு வரப்போவதாக அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி கலாசாரம் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளிக்கூடங்களில் நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அமெரிக்க மக்களை பெரிதும் கலக்கமடையச் செய்துள்ளது. 

அமெரிக்காவில் 2024-ல் மட்டும் இதுவரை 385 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே அந்நாட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. 

சமீபத்தில் இது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோபைடன், 

ஒரு தேசமாக, துப்பாக்கி வன்முறையை நாம் தொடர்ந்து ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று கூறினார். 

கடந்த 2023-ம் ஆண்டில், அமெரிக்காவில் துப்பாக்கி சட்டத்தை கவனிக்கும் துறை துணை அதிபர் கமலா ஹாரிசிடம் ஒப்படைக்கப்பட்டது. அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையைத் தடுப்பதற்கும் பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் அவர் பொறுப்பேற்றார். 

இந்த நிலையில், இன்னும் 6 வாரங்களில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர அதிபருக்கான நிறைவேற்று அதிகாரம் மூலம் புதிய சட்டத்தை கொண்டு வரப்போவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். 

தொடர்ந்து ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய ஜோ பைடன்,  அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையை முடிவுக்கு கொண்டு வர, முதலில் அமெரிக்காவில் துப்பாக்கி பிரச்சினை பற்றி நாம் வெளிப்படையாக பேச வேண்டும். 

அமெரிக்கா துப்பாக்கி வன்முறையால் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, நோய் அல்லது விபத்துகளில் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகம். இது மிகவும் வேதனையானது என்று தெரிவித்தார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து