முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதார், பான் கார்டு விவரங்களை வெளியிட்ட இணையதளங்கள் முடக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2024      இந்தியா
Aadhaar-PAN-Card

Source: provided

புதுடெல்லி : ஆதார், பான் கார்டு விவரங்களை வெளியிட்ட பல்வேறு இணையதள பக்கங்களை மத்திய அரசு முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்புக் குழு இணையதளப் பக்கங்களை கண்காணித்து வருகிறது. 

இந்த நிலையில் மக்களின் ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்கள் உள்ளிட்ட முக்கியமான தனிப்பட்ட தகவல்களை சில இணையதளங்கள் வெளியிடுவது தெரியவந்தது. அவற்றின் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

இந்திய மக்களின் ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களை வெளியிடுவதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு வந்த தகவல் அடிப்படையில், பல்வேறு இணையதள பக்கங்களை முடக்கி, அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்புக்கு இணங்க, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தனிப்பட்ட விவரங்கள் கசிந்தால் அவர்கள் ஆன்லைன் மோசடிகளுக்கு ஆளாக நேரிடும்.  கசிந்த தகவல்களால் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டால், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் அதிகாரிகளை சந்தித்து புகார் அளித்து இழப்பீடு பெறலாம். இதற்கு தகவல் தொழில்நுட்ப செயலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து