முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர், திருவண்ணாமலை ஆகிய நகரங்களில் மினி டைடல் பூங்கா : டெண்டர் கோரியது தமிழக அரசு

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2024      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : கரூர், திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான வரைபடத் தயாரிப்பு மற்றும் திட்ட மேலாண்மை பணிக்கு ஆலோசகர்களை தேர்வு செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. 

தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்திலும் தொடர்ந்து தஞ்சை மற்றும் சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு தமிழக அரசு முதற்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளது. கடந்த ஜூன் மாதம் தமிழக சட்டப்பேரவையில், வர்த்தக மற்றும் தொழில் துறைக்கான மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 

அப்போது கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் இதற்கான முதற்கட்டப் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. 

கரூர், திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான வரைபடத் தயாரிப்பு மற்றும் திட்ட மேலாண்மை பணிக்கு ஆலோசகர்களை தேர்வு செய்ய டெண்டர் கோரியுள்ளது. இதன் மூலமாக அங்கு ஐ.டி. துறையில் தலா 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து